ஸ்தோத்திரங்கள், mp3 பாடல்கள், காணொளிகள் போன்றவற்றை இலகுவாகக் கண்டுகொள்ள, உருவாக்கப்பட்ட தொகுப்பினைக் கீழே காணலாம்.

"இலகுவான தொகுப்புக்கள்" என்பதை சொடுக்குவதன்(Click) மூலம் அனைத்துத் தொகுப்புக்களையும் நீங்கள் காணலாம்:

|| * இலகுவான தொகுப்புக்கள் * ||


BEST VIEW : <1280x720 (over 1280x720 Resolution)
-*-*-*-*-*-
Showing posts with label சிவ பதிகங்கள். Show all posts
Showing posts with label சிவ பதிகங்கள். Show all posts

Monday, May 11, 2009

லிங்காஷ்டகம் (எழுத்தில்)




முதலில் சமஸ்கிருதத்தில் அமைந்த லிங்காஷ்டகம் :

ப்ரஹ்ம முராரி ஸுரார்சித லிங்கம்
நிர்மல பாஸித ஸோபித லிங்கம்
ஜன்மஜ துக்க வினாசக லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

தேவ ரிஷி ப்ரவரார்சித லிங்கம்
காம தஹன கருணாகர லிங்கம்
ராவண தர்ப வினாஷன லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

ஸர்வ ஸுகந்த ஸுலேபித லிங்கம்
புத்தி விவர்த்தன காரண லிங்கம்
சித்த சுராசுர வந்தித லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

கனக மஹாமணி பூஷித லிங்கம்
பணிபதி வேஷ்டித ஸோபித லிங்கம்
தக்ஷ ஸுயக்ஞ விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

குங்கும சந்தன லேபித லிங்கம்
பங்கஜ ஹார ஸுஸோபித லிங்கம்
ஸஞ்சித பாப விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

தேவ கணார்ச்சித ஸேவித லிங்கம்
பாவைர் பக்தி ப்ரவேசக லிங்கம்
தினகர கோடி ப்ரபாகர லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

அஷ்ட தளோபரி வேஷ்டித லிங்கம்
ஸர்வ ஸமுத்பவ காரண லிங்கம்
அஷ்ட தரித்ர விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

ஸுரகுரு ஸுரவர பூஜித லிங்கம்
ஸுரவன புஷ்ப சதார்சித லிங்கம்
பராத்பரம் பரமாத்மக லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

லிங்காஷ்டகம் இதம் புண்யம்
யே படேத் சிவ சன்னிதௌ
சிவலோகம் அவாப்நோதி
சிவே ந ஸஹமோததே


இதனுடைய தமிழாக்கப் பாடல் இதோ :

நான்முகன் நாரணன் வணங்கிடும் லிங்கம்
நல்லதோர் ஒளிமய மாகிடும் லிங்கம்
கால வினைகளை ஓட்டிவிடும் லிங்கம்
தோற்றமதாம் சதாசிவ லிங்கம்

அமரரும் முனிவரும் பணிந்திடும் லிங்கம்
காமனை எரித்த தயாபர லிங்கம்
இராவண ஆணவம் அடக்கிய லிங்கம்
தோற்றமதாம் சதாசிவ லிங்கம்

அனைத்து நலன்களும் அளித்திடும் லிங்கம்
அறிவைக் கூர்மையாய் ஆக்கிடும் லிங்கம்
சித்தர்கள் மற்றவர் போற்றிடும் லிங்கம்
தோற்றமதாம் சதாசிவ லிங்கம்

கனக மகாமணி தொழுதிடும் லிங்கம்
கழுத்தினில் நாகத்தை அணிந்திடும் லிங்கம்
தக்கனின் வேள்வியைத் தகர்த்திய லிங்கம்
தோற்றமதாம் சதாசிவ லிங்கம்

குங்குமம் சந்தனம் மணந்திடும் லிங்கம்
பங்கய மலரினை அணிந்திடும் லிங்கம்
வஞ்சகம் வல்வினை போக்கிடும் லிங்கம்
தோற்றமதாம் சதாசிவ லிங்கம்

தேவ கண்களும் போற்றிடும் லிங்கம்
தேய்விலா பக்தியைத் தந்திடும் லிங்கம்
சூரியக் கோடிப் பிரகாச லிங்கம்
தோற்றமதாம் சதாசிவ லிங்கம்

எட்டொடு பத்தெனும் தத்துவ லிங்கம்
அத்துணைத் தோற்றத்தின் அடிப்படை லிங்கம்
எண்வகை வறுமைகள் அகற்றிடும் லிங்கம்
தோற்றமதாம் சதாசிவ லிங்கம்

குருமுதல் கோள்களும் பரவிடும் லிங்கம்
வில்வா ராதனை விரும்பிடும் லிங்கம்
கருணையின் வடிவாய் அருள்தரும் லிங்கம்
தோற்றமதாம் சதாசிவ லிங்கம்.


இதனோடு தொடர்புடைய பதிவு : லிங்காஷ்டகம் (ஒலி,ஒளிப் பதிவு)


search tags : Lingastagam, Lingashtagam, Lord shiva, லிங்காஷ்டகம்

Sunday, May 10, 2009

லிங்காஷ்டகம்

சக்தி மிகுந்த லிங்காஷ்டகம். இனிமையாக படங்களோடு இணைந்ததாக உருவாக்கியுள்ளனர். அவை இதோ உங்களுக்காக:-

முதலில் சமஸ்கிருதத்தில் மட்டும் அமைந்த லிங்காஷ்டகம்.



நன்றி : karthickap (யு ட்யூபில் தரவேற்றியவர்)


முதலில் தமிழிலும், பின்னர் சமஸ்கிருதத்திலும் அமைந்த லிங்காஷ்டகம்.



நன்றி : vvvvarun ( யு ட்யூபில் தரவேற்றியவர்)


இதனோடு தொடர்புடைய பதிவு : லிங்காஷ்டகம் (எழுத்தில்)


search tags : Lingashtagam, Lingastagam, Lord Shiva, S.P.B, லிங்காஷ்டகம்

Thursday, February 19, 2009

திருவாசகம்

திருச்சிற்றம்பலம்.

தொல்லை யிரும்பிறவி சூழுந்தளை நீக்கி
அல்லலறுத்தானந்தம் ஆக்கியதே
எல்லை
மருவா நெறியளிக்கும் வாதவூர் எங்கோன்
திருவாசகம் என்னுந் தேன்.

நமச்சிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க!
இமைப்பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க!
ஆகமம், ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க!
ஏகன், அநேகன், இறைவன் அடி வாழ்க!

வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க!
பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க!
புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க!
கரம் குவிவார் உள் மகிழும் கோன்கழல்கள் வெல்க!
சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன்கழல் வெல்க!

ஈசன் அடி போர்றி! எந்தை அடி போற்றி!
தேசன் அடி போற்றி! சிவன் சேவடி போற்றி!
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி!
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி!
சீர்ஆர் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி!

ஆராத இன்பம் அருளும் மலை போற்றி!
சிவன், அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்,
அவன் அருளாலே அவன்தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னை,
முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன்யான்

கண்நுதலான் தன் கருணைக் கண்காட்ட வந்துஎய்தி
எண்ணுதற்கு எட்டா எழில்ஆர் கழல் இறைஞ்சி,
விண்நிறைந்து, மண்நிறைந்து மிக்காய்விளக்கு ஒளியாய்
எண் இறந்து, எல்லை இலாதானே! நின் பெரும் சீர்
பொல்லா வினையேன், புகழும் ஆறு ஒன்று அறியேன்;

புல்லாகி, பூடாய், புழுவாய், மரமாகிப்
பல்விருகம் ஆகி, பறவையாய், பாம்பாகி
கல்லாய், மனிதராய், பேயாய், கணங்களாய்,
வல் அசுரர் ஆகி, முனிவராய்த் தேவராய்,
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம் பெருமான்!
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு, இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரம் ஆய்நின்ற
மெய்யா! விமலா! விடைப்பாகா! வேதங்கள்
'ஐயா' என ஓங்கி, ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே!

வெய்யாய்! தணியாய்! இயமானன் ஆம் விமலா!
பொய்ஆயின எல்லாம் போய்அகல வந்தருளி
மெய்ஞ்ஞானம் ஆகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே!
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே!
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்அறிவே!

ஆக்கம், அளவு, இறுதி, இல்லாய்! அனைத்து உலகும்
ஆக்குவாய், காப்பாய், அழிப்பாய் அருள் தருவாய்,
போக்குவாய், என்னைப் புகுவிப்பாய் நிப்தொழும்பில்
நாற்றத்தின் நேரியாய்! சேயாய்! நணியானே!
மாற்றம், மனம்கழிய நின்ற மறையோனே!

கறந்தபால் கன்னலொடு, நெய்கலந்தாற் போலச்
சிறந்து, அடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று,
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்!
நிறங்கள் ஓர் ஐந்துடையாய்! விண்ணோர்கள் ஏத்த
மறைந்துஇருந்தாய் எம் பெருமான்! வல்வினையேன் தன்னை

மறைந்திட மூடிய மாய இருளை,
அறம், பாவம், எனும் அரும் கயிற்றால் கட்டி,
புறம்தோல் போர்த்து, எங்கும் புழுஅழுக்கு மூடி,
மலம்சோரும் ஒன்பது வாயில் குடிலை
மலங்கப் புலன்ஐந்தும் வஞ்சனையைச் செய்ய

விலங்கு மனத்தால், விமலா உனக்குக்
கலந்த அன்பாகி, கசிந்துஉள் உருகும்
நலம்தான் இலாத சிறியேற்கு நல்கி,
நிலம்தன்மேல் வந்தருளி, நீள் கழல்கள் காட்டி,
நாயிற் கடையாய் கிடந்த அடியேற்கு

தாயிற் சிறந்த தயாஆன தத்துவனே!
மாசுஅற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே!
தேசனே! தேன்ஆர் அமுதே! சிவபுரனே
பாசம்ஆம் பற்றுஅறுத்து, பாரிக்கும் ஆரியனே!
நேச அருள் புரிந்து, நெஞ்சில் வஞ்சம் கெட,

பேராது நின்ற பெரும் கருணைப் பேர் ஆறே!
ஆரா அமுதே! அளவு இலாப் பெம்மானே!
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே!
நீராய் உருக்கி, என் ஆர்உயிராய் நின்றானே!
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே!

அன்பருக்கு அன்பனே! யாவையும் ஆய், அல்லையும் ஆய்
சோதியனே! துன்இருளே தோன்றாப் பெருமையனே!
ஆதியனே! அந்தம் நடுஆகி, அல்லானே!
ஈர்த்துஎன்னை, ஆட்கொண்ட எந்தை பெருமானே!
கூர்த்தமெய்ஞ் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தின்

நோக்கரிய நோக்கே! நுணுகுஅரிய நுண்உணர்வே!
போக்கும், வரவும், புணர்வும் இலாப் புண்ணியனே!
காக்கும்எம் காவலனே! காண்பரிய பேர்ஒளியே!
ஆற்றுஇன்ப வெள்ளமே! அத்தா! மிக்காய் நின்ற
தோற்றச் சுடர்ஒளி ஆய், சொல்லாத நுண்உணர்வு ஆய்

மாற்றம் ஆம் வையகத்தின் வெவ்வேறேவந்து அறிவுஆம்
தேற்றனே! தேற்றத் தெளிவே என சிந்தனையுள்
ஊற்றுஆன உண்ஆர் அமுதே! உடையானே!
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
ஆற்றேன்! "எம் ஐயா", "அரனே!ஓ" என்று என்று

போற்றிப் புகழ்ந்திருந்து, பொய்கெட்டு, மெய்ஆனார்
மீட்டு இங்கு வந்து, வினைப்பிறவி சாராமே,
கள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே!
நள்இருளில் நட்டம் பயின்றுஆடும் நாதனே
தில்லையுள் கூத்தனே! தென்பாண்டி நாட்டானே!

அல்லல் பிறவி அறுப்பானே! ஓ! என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லி, திருவடிக்கீழ்ச்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்,
பல்லோரும் ஏத்தப் பணிந்து.

திருச்சிற்றம்பலம்

search tags : thiruvasagam, namashivaya, shivan, manikavasagar, மாணிக்கவாசகர், திருவாசகம், தேவாரம்.

Related Posts Widget for Blogs by LinkWithin