ஸ்தோத்திரங்கள், mp3 பாடல்கள், காணொளிகள் போன்றவற்றை இலகுவாகக் கண்டுகொள்ள, உருவாக்கப்பட்ட தொகுப்பினைக் கீழே காணலாம்.

"இலகுவான தொகுப்புக்கள்" என்பதை சொடுக்குவதன்(Click) மூலம் அனைத்துத் தொகுப்புக்களையும் நீங்கள் காணலாம்:

|| * இலகுவான தொகுப்புக்கள் * ||


BEST VIEW : <1280x720 (over 1280x720 Resolution)
-*-*-*-*-*-

Wednesday, February 18, 2009

விநாயகர் காரியசித்தி மாலை

பந்தம் அகற்றும் அனந்த குணப்
பரப்பும் எவன் பால் உதிக்குமோ,
எந்த உலகும் எவனிடத்தில்
ஈண்டி இருந்து சுரக்குமோ,
சந்த மறை ஆகமங் கலைகள்
அனைத்தும் எவன் பால் தகவருமோ,
அந்த இறையாம் கணபதியை
அன்பு கூறத் தொழுகின்றோம்.

உலகம் முழுதும் நீக்கமற
ஒன்றாய் நிற்கும் பொருள் எவன், இவ்
உலகில் பிறக்கும் விகாரங்கள்
உறாத மேலாம் ஒளியாவன்,
உலகம் புரியும் வினைப்பயனை
ஊட்டும் களைகண் எவன், அந்த
உலக முதலைக் கணபதியை
உவந்து சரணம் அடைகின்றோம்.

இடர்கள் முழுதும் எவன் அருளான்
எரிவீ ழும்பஞ்சு எனமாயும்,
தொடரும் உயிர்கள் எவன் அருளால்
சுரர் வாழ் பதியும் உறச்செய்யும்,
கடவுள் முதலோர்க்கு ஊறு இன்றிக்
கருமம் எவனால் முடிவுறும், அத்
தடவு மருப்புக் கணபதி பொன்
சரணம் சரணம் அடைகின்றோம்.

மூர்த்தி யாகித் தலமாகி
முந்நீர் கங்கை முதலான,
தீர்த்தம் ஆகி அறிந்து அறியாத்
திறத்தி னாலும் உயிர்க்கு நலம்,
ஆர்த்தி நாளும் அறியாமை
அகற்றி அறிவிப் பான்எவன், அப்
போர்த்த கருணைக் கணபதியைப்
புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.

செய்யும் வினையின் முதல்யாவன்
செய்யப் படும் அப் பொருள் யாவன்,
ஐயம் இன்றி உளதாகும்
அந்தக் கருமப் பயன் யாவன்,
உய்யும் வினையின் பயன் விளைவில்
ஊட்டி விடுப்பான் எவன், அந்தப்
பொய்யில் இறையைக் கணபதியைப்
புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.

வேதம் அளந்தும் அறிவரிய
விகிர்தன் யாவன், விழுத்தகைய
வேத முடிவில் நடம் நவிலும்
விமலன் யாவன், விளங்கு பர
நாத முடிவில் வீற்றிருக்கும்
நாதன் எவன், எண் குணன் எவன், அப்
போத முதலைக் கணபதியைப்
புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.

மண்ணில் ஓர் ஐங் குணமாகி
வதிவான் எவன், நீர் இடைநான்காய்
நண்ணி அமர்வான் எவன், தீயின்
மூன்றாய் நவில்வான் எவன், வளியின்
எண்ணும் இரண்டு குணமாகி
இயைவான் எவன், வான் இடை ஒன்றாம்,
அண்ணல் எவன், அக் கணபதியை
அன்பிற் சரணம் அடைகின்றோம்.

பாச அறிவில் பசு அறிவில்
பற்றற்கு அரிய பரன்யாவன்,
பாச அறிவும் பசு அறிவும்
பயிலப் பணிக்கும் அவன் யாவன்,
பாச அறிவும் பசு அறிவும்
போற்றி மேலாம் அறிவான
தேசன் எவன், அக் கணபதியைத்
திகழச் சரணம் அடைகின்றோம்.

search tags: விநாயகர், காரியசித்திமாலை, vinayagar, kariyachimalai

தொடர்புடைய பதிவு : விநாயகர் அகவல்

No comments:

Post a Comment

Related Posts Widget for Blogs by LinkWithin