ஸ்தோத்திரங்கள், mp3 பாடல்கள், காணொளிகள் போன்றவற்றை இலகுவாகக் கண்டுகொள்ள, உருவாக்கப்பட்ட தொகுப்பினைக் கீழே காணலாம்.

"இலகுவான தொகுப்புக்கள்" என்பதை சொடுக்குவதன்(Click) மூலம் அனைத்துத் தொகுப்புக்களையும் நீங்கள் காணலாம்:

|| * இலகுவான தொகுப்புக்கள் * ||


BEST VIEW : <1280x720 (over 1280x720 Resolution)
-*-*-*-*-*-

Sunday, February 22, 2009

சக்திபீடங்கள்

அன்பர்களே நீங்கள் சக்தி பீடங்களைப் பற்றி அறிந்திருப்பீர்கள். ஆனால் முழுமையாக அறிந்துள்ளீர்களா ?. பொதுவாக சக்தி பீடங்கள் 64 உண்டு எனக் குறிப்பிடுவர். ஆனால் சிலர் 108 உண்டெனவும், சிலர் 51 உண்டெனவும் கூறுவர். இதில் எது மெய்யானது எனக் கண்டுபிடிப்பது மிகக்கடினம்.

ஆகையால் நாம் 51, 64, 108 ஆகிய மூன்று விதமான சக்திபீடங்களைப் பற்றியும் அறிந்து கொள்ளலாம்.

முதலில் சக்தி பீடம் உருவான வரலாற்றை நோக்கலாம். வரலாற்றிலும் மூன்று வகையான வரலாறுகள் உண்டு.

முதல் வரலாறு:

சிவபெருமானை மதிக்காமல் தக்கன் செய்த யாகத்திற்குச் சென்ற பராசக்தியான தாஷாயணி, அங்கு தானும் தனது நாயகனும் அவமதிக்கப்பட்டதால் மனம் பொறுக்காமல் அங்கு இருந்த யாககுண்டத்தில் விழுந்து உயிர் துறந்தார். இதனை அறிந்த சிவனாட் அடங்காச் சினத்திடன் அங்கு வந்து தனது தேவியின் இறந்த உடலை எடுத்துச் சிரசின் மேலே வைத்து சுழன்று சுழன்று ஆவேசமாக ஆடினார். உலகமே அஞ்சியது. அழிவு நெருங்கி விட்டதோ என பிரம்மா முதல் அனைவரும் நடுங்கினர். இதனைப் பார்த்த காத்தற் கடவுளான திருமால் தமது சக்கராயுதத்தை ஏவிப் பராசக்தியின் உடலைத் துண்டுகளாக்கி தெறித்து விழச் செய்தார். பாரத நாட்டின் பல்வேறு பாகங்களில் உடற்பாகங்கள் விழுந்தன, அவையே சக்தி பீடங்களாக திகழ்கின்றன.

- - - - -

இரண்டாவது வரலாறு:

தட்சன் மகளாய் அன்னை அவதரித்து, சதிதேவி எனப் பெயர் பெற்று, தந்தை சிவனை தூஷித்ததால் அக்கினியில் பாய அக்கினிக்குள் சித்கலாரூபமாக இருந்த சதிதேவியின் திருமேனியைத் தோளில் தூக்கிக் கொண்டு உலகமெல்லாம் திரிந்த சிவன், விஷ்ணு வேண்ட சித்கலாரூபமான அன்னையின் கலைகளை அகிலமெங்கும் தனித் தனிப் பீடமாக இருக்கச் செய்தார். அங்கனம் அமைந்த நூற்றெட்டுப் பீடங்களிலும் தானும் அமர்ந்து அருள் செய்தார். இந் நூற்றெட்டு சக்தி பீடங்களின் பெயர்களையும், தேவியின் பெயர்களையும் கேட்கவோ நினைக்கவோ செய்பவர் பாவங்களில் இருந்து விடுபட்டுத் தேவியின் திருவடி அடைவர் எனத் தேவிபாகவதத்தில் வியாசர் கூறியுள்ளார்.

- - - - -

மூன்றாவது வரலாறு:

சிவபெருமான் தேவியின் சிற்கலாரூபத்தைத் தாங்கி நிற்கையில் உலக ஜீவனத்தின் பொருட்டு அதனை வேண்டி திருமாலே சக்தி பீடங்களாக ஸ்தாபித்தார் என்கிறது அபிதான சிந்தாமணி எனும் நூல்.

- - - - -

இனி தேவியின் மூன்று வகையான சக்தி பீடங்களையும் பற்றிப் பார்க்கலாம்.

- - - - -

தேவியின் ஐம்பத்தொரு (51) சக்தி பீடங்கள்:

1 - காஞ்சிபுரம் - இது ஸ்ரீ சக்கரபீடம். தேவியின் எலும்புகள் இங்கு விழுந்ததாகக் கூறுவர்.

2 - மதுரை - இது மந்த்ரிணி பீடம்.

3 - திருஆனைக்கா - இது வராகி பீடம்.

4 - திருக்குற்றாலம் - இது பராசக்தி பீடம்.

5 - திருவாரூர் - இது கமலை பீடம், காமகலா பீடம் என்றும் கூறுவர்.

6 - கன்னியாகுமரி - இது தேவியின் பிருஷ்டபாகம் விழுந்த இடம்.

7 - அம்பத்தூர் - சென்னைக்கு அருகிலுள்ள வைணவி ஆலயம், சக்திபீட வரிசையில் ஐம்பத்தோரூர் என்பதே அம்பத்தூர் என மருவியதாகக் கூறுவர்.

8 - கோகர்ணம் - வலது காது விழுந்த இடம். பரசுராம ஷேத்திரம். தேவியின் திருநாமம் பத்ரகர்ணிகை.

9 - ஸ்ரீ சைலம் - இடது காது விழுந்த இடம். சிறந்த சிவத்தலம். அம்பிகையின் திருநாமம் பிரமராம்பாள். மாதவி பீடம்.

10 - பூரி - நாபி விழுந்த இடம். உத்கலம் எனப்படும் ஒரிசா மாநிலத்தில் உள்ளது. பைரவ பீடம். தேவியின் திருநாமம் விமலை.

11 - சிருங்கேரி - மைசூர் மாநிலத்தில் உள்ளது. தேவி சாரதையாகத் திகழ்கின்றாள்.

12 - கோலாப்பூர் - கண்கள் விழுந்த இடம். அன்னை மகா இலக்குமியாக விளங்குகின்றாள்.

13 - அரசூர் - தனம் விழுந்த இடம். ஆபூமலைக்கு அருகில் உள்ளது. இங்கு சிலா வடிவில் இல்லாமல் அம்பிகை யந்திர வடிவில் அம்பிகா என்ற திருநாமத்துடன் விளங்குகின்றாள்.

14 - ஜலந்தரா - தனம் விழுந்த இடம். தேவியின் திருநாமம் திரிபுரமாலினி.

15 - துவாராவாட் - குஜராத் மாநிலத்தில் உள்ளது.

16 - பிரபாசா - திருவயிறு விழுந்த இடம். இதனை சோமநாதத் தலம் என்றும் கூறுவர்.

17 - பராகத் - இக்குன்றின் அமைப்பே காளிகா யந்திர உருவில் உள்ளது.

18 - சிம்லா - தேவியின் திருநாமம் சியாமளா. இதுவே திரிந்து சிம்லா ஆயிற்று.

19 - மானசரோவர் - இது ஒரு தடாகம். தலை விழுந்த இடம். இமயத்தில் உள்ளது. அம்பிகை தாட்சாயணி. குமுதா பீடம்.

20 - காஷ்மீரம் - கழுத்து விழுந்த இடம். அம்பிகையின் திருநாமம் மகாமாயை.

21 - நேபாளம் - முழங்கால் விழுந்த இடம். இங்குள்ள அஷ்ட மாத்ருகைகளின் ஆலயம் புகழ்மிக்கது.

22 - ஜுவாலாமுகி - நாக்கு விழுந்த இடம்.

23 - சுகந்தா - மூக்கு விழுந்த இடம். இமயமலைச் சரிவில் உள்ள தலம்.

24 - வாரணாடி ( காசி ) - காதுக் குண்டலம் விழுந்த இடம். இது மணிகர்ணிகை பீடம். தேவியின் திருநாமம் விசாலாஷி.

25 - நைமிசாரண்யம் - அம்பிகை இலிங்க தாரிணியாகத் திகழ்கின்றாள்.

26 - குருஷேத்திரம் - முழங்கை விழுந்த இடம்.

27 - பிரயாகை - கைவிரல்கள் விழுந்த இடம்.

28 - உஜ்ஜயினி - இங்கு தேவி மங்கள சண்டிகையாக விளங்குகின்றாள். மகாகவி காளிதாசனுக்கு அருள் நல்கியவள்.

29 - பிருந்தாவனம் - கூந்தல் விழுந்த இடம். இராதா பீடம்.

30 - அத்தினாபுரம் - இங்கு அம்பிகையின் திருநாமம் ஜெயந்தி. ஜயந்தி பீடம்.

31 - கன்னியாகுப்ஜம் - கௌரி பீடம். அம்பிகையின் திருநாமம் கௌரி.

32 - புஷ்கரம் - அன்னையின் திருநாமம் புருஹுதை. புருஹுதா பீடம்.

33 - கேதாரம் - சன்மார்க்க தாயினி பீடம்.

34 - பத்ரை - பத்ரேஸ்வரி பீடம்.

35 - உருத்திர கோடி - உருத்ராணி பீடம்.

36 - சாளக்ராமம் - மஹாதேவி பீடம்.

37 - மலயாசலம் - தேவியின் திருநாமம் கல்யாணி. ரம்பா பீடம்.

38 - தேவிகா தடம் - நந்தினி பீடம்.

39 - சஹஸ்திராஷம் - உத்பலாஷி பீடம்.

40 - வராக சைலம் - ஜயா பீடம்.

41 - இரண்யாஷம் - மகோத்பலா பீடம்.

42 - திரிகூடபர்வதம் - உருத்திர சுந்தரீ பீடம்.

43 - சஃயபர்வதம் - ஏகவீரா பீடம்.

44 - வைத்தியநாதம் - ஆரோக்யா பீடம்.

45 - மகாகாளம் - மஹேஸ்வரி பீடம்.

46 - விந்தியபர்வதம் - நிதம்பை பீடம்.

47 - வேதமுகம் - காயத்ரீ பீடம்.

48 - ஹேமகூடம் - மன்மதா பீடம்.

49 - அமர கண்டம் - சண்டிகா பீடம்.

50 - கல்கத்தா - கால் விரல்கள் விழுந்த இடம். அன்னை காளிகா தேவியாக அருள் பாலிக்கின்றாள்.

51 - காமரூபம் - உபஸ்தம் விழுந்த இடம். இத்தலம் அஸ்ஸாமில் உள்ளது. காமாக்யா என்பது அம்பிகையின் திருநாமம்.

- - - - -

தேவியின் அறுபத்துநான்கு சக்தி பீடங்கள்:

1 - மாத்ரு புரம் - ரேணுகா பீடம்.
2 - கொல்லாபுரம் - லஷ்மி பீடம்.
3 - துளஜாபுரம் - சப்தச்ருங்க பீடம்.
4 - இங்குளை - ஜுவாலாமுகீ பீடம்.
5 - ஸ்ரீ காசி - அன்னபூர்ணா பீடம்.
6 - ரக்த தந்த்ரிகை - விந்த்யாசல பீடம்.
7 - ரக்த தந்த்ரிகை - துர்கா பீடம்.
8 - சாகம்பரீ - ப்ராமீரி பீடம்.
9 - மதுரை - மீனாட்ஷி பீடம்.
10 - நேபாளம் - ரஷய காளீ பீடம்.
11 - ஸ்ரீ நகரம் - சாம்பு நகேச்வரி பீடம்.
12 - நிலபர்வதம் - நீலாம்பரி பீடம்.
13 - ஸ்ரீ சந்திரகலை - கௌசிகீ பீடம்.
14 - ஸ்ரீ காஞ்சி - காமாஷி பீடம்.
15 - வைத்ய நாதம் - ஜ்வாலா பீடம்.
16 - சைனா - நீலசரஸ்வதி பீடம்.
17 - வேதாரண்யம் - ஏகாம்பர பீடம்.
18 - வேதாரண்யம் - சுந்தரீ பீடம்.
19 - மஹாசலம் - யோகேஸ்வர பீடம்.
20 - ஹிதய பர்வதம் - மாதேவீ பீடம்.
21 - மணித்வீபம் - புவனேஸ்வரி பீடம்.
22 - மணித்வீபம் - திரிபுரபைரவி பீடம்.
23 - அமரேசம் - சண்டிகா பீடம்.
24 - ப்ரபாஸம் - புஷகரேஷணி பீடம்.
25 - புஷ்கரம் - காயத்ரீ பீடம்.
26 - நைமிமீசம் - தேவி பீடம்.
27 - புஷ்காராஷம் - புருகாதா பீடம்.
28 - ஆஷாடம் - ரதி பீடம்.
29 - பாரபூதி - பூதி பீடம்.
30 - கண்ட முண்டம் - தண்டினீ பீடம்.
31 - நாமுலம் - நாகுலேஸ்வரி பீடம்.
32 - ஸ்ரீகிரி - சாரதா பீடம்.
33 - பஞ்ச நகம் - திரிசூல பீடம்.
34 - ஹரிச் சந்திரம் - சந்திரா பீடம்.
35 - ஆமரதகேஸ்வரம் - ஸீஷ்மபீடம்.
36 - மஹாகாளாஸ்தி - சாங்கீரீ பீடம்.
37 - மத்யாபீதம் - சர்வாணி பீடம்.
38 - கயை - மங்கள பீடம்.
39 - கேதாரம் - மார்க்கதாயினீ பீடம்.
40 - பைரவம் - பைரவீ பீடம்.
41 - குருஷேத்ரம் - தர்ணுப்பிரியை பீடம்.
42 - விபினாகுலம் - ஸ்வாயம் பலி பீடம்.
43 - கணகளம் - உக்ர பீடம்.
44 - விமகேஸ்வரம் - விஸ்வேஸ பீடம்.
45 - ஹடாஹாசம் - மதாந்தக பீடம்.
46 - பீமம் - பீமபீடம்.
47 - வஸ்த்ரம்பதம் - பவானி பீடம்.
48 - அவமுக்தம் - விசாலாஷி பீடம்.
49 - அர்த்த கோடிகம் - ருத்ராணி பீடம்.
50 - அவழுக்தம் - வராஹி பீடம்.
51 - மஹாலயம் - மஹாபாகாபீடம்.
52 - கோகர்ணம் - பத்ரகாளீ பீடம்.
53 - பத்ரகர்ணீகம் - பத்ரா பீடம்.
54 - ஸ்தாணும் - ஸ்தாண்வீசாபீடம்.
55 - ஸ்வர்ணாஷம் - உத்பலாஷி பீடம்.
56 - கமலாலயம் - கமலா பீடம்.
57 - சகமண்டலம் - ப்ரசண்ட பீடம்.
58 - மகேடெம் - மகுடேஸ்வரி பீடம்.
59 - குரண்டலம் - த்ரிசந்திரகா பீடம்.
60 - மண்டலேசம் - சரண்டகா பீடம்.
61 - ஸ்தூலகேஸ்வரம் - ஸ்தூல பீடம்.
62 - சங்க கர்ணம் - தீவனி பீடம்.
63 - கரவஞ்சம் - காளி பீடம்.
64 - ஞானிகள் இதயம் - பரமேஸ்வரி பீடம்.

- - - - -

தேவியின் நூற்றெட்டு சக்தி பீடங்கள்:

1 - காசி ஷேத்திரத்தில் விசாலாஷி
2 - நைமிசாரண்யத்தில் லிங்க தாரணீ
3 - பிரயாகையில் லலிதை
4 - கந்தமாதனத்தில் காமுகீ
5 - மானசரஸில் குமுதா
6 - அதன் தென்திசையில் விசுவகாமா பகவதி
7 - அதன் வடதிசையில் விஸ்வகாமப்பூரணி
8 - கோமந்தகத்தில் கோமதி
9 - மந்தரத்தில் காமசாரிணீ
10 - சயித்திராதத்தில் மதோத்கடை
11 - அஸ்தினாபுரத்தில் ஜயந்தி
12 - கன்யாகுப்ஜத்தில் கௌரி
13 - மலையாசலத்தில் ரம்பை
14 - ஏகாம்பர பீடத்தில் கீர்த்திமதி
15 - விஸ்வத்தில் விஸ்வேஸ்வரி
16 - புஷ்பகரத்தில் புருஹீதை
17 - கேதார பீடத்தில் சன்மார்க்கதாயினி
18 - இமயமலையின் பின்புறத்தில் மந்தா தேவி
19 - கோகர்ணத்தில் பத்திரகர்ணிகா தேவி
20 - பவானியில் ஸ்தானேஸ்வரி
21 - வில்வ பத்திரிகையில் பில்வகை
22 - ஸ்ரீசைலத்தில் மாதவி
23 - பத்திரையில் பத்திரேஸ்வரி
24 - வராக மலையில் ஜயை
25 - கமலாலயத்தில் கமலை
26 - ருத்ரகோடியில் ருத்திராணி
27 - காலஞ்சரத்தில் காளி
28 - சாளக்கிராமத்தில் மகாதேவி
29 - சிவலிங்கத்தில் ஜலப்பிரபை
30 - மகாலிங்கத்தில் கபிலை
31- மாகோட்டத்தில் மகுடேஸ்வரி
32 - மாயாபுரியில் குமாரி
33 - சந்தானத்தில் லலிதாம்பிகை
34 - கயையில் மங்களாம்பிகை
35 - புருஷோத்தமத்தில் விமலை
36 - சகஸ்ராஷத்தில் உத்பலாட்சி
37 - இரணாஷத்தில் மகோத்பலை
38 - விபசாவில் அமோகாஷி
39 - புண்டரவர்த்தனத்தில் பாடலீ
40 - சுபாரு சுவத்தில் நாராயணி
41 - திரிகூட பர்வதத்தில் ருத்திர சுந்தரி
42 - விபுலத்தில் விபுலாதேவி
43 - மலையாசலத்தில் கல்யாணி
44 - சஹ்ய பர்வதத்தில் ஏகவீனர்
45 - அரிச்சந்திரத்தில் சந்திரிகாதேவி
46 - ராமதீர்த்தத்தில் ரமணா
47 - யமுனா தீர்த்தத்தில்மிருகாவதி
48 - கோடிக்கரையில் கோடவீ
49 - மாதவனத்தில் சுகந்தாதேவி
50 - கோதாவரியில் திரிசந்தி
51 - கங்காதுவாரத்தில் ரதப்பிரியை
52 - சிவகுண்டத்தில் சுபானந்தை
53 - தேவிகாதடத்தில் நந்தினி
54 - துவாரகையில் ருக்மிணி
55 - பிருந்தாவனத்தில் ராதை
56 - மதுரையில் தேவகி
57 - பாதாளத்தில் பரமேஸ்வரி
58 - சித்திரகூடத்தில் சீதாதேவி
59 - விந்தியத்தில் விந்தியாவாசினி
60 - கரவீரத்தில் மகாலஷ்மி
61 - வைத்தியநாதத்தில் ஆரோக்யை
62 - விநாயகத்தலத்தில் உமாதேவி
63 - மகாகளத்தில் மகேஸ்வரி
64 - உஷ்ண தீர்த்தத்தில் அபயாம்பிகை
65 - விந்தியமலையில் நிதம்பை
66 - மாண்டவியத்தில் மாண்டவி
67 - மகேஸ்வரபுரத்தில் ஸ்வாஹாதேவி
68 - சகலண்டலத்தில் பிரசண்டை
69 - அமரகண்டத்தில் சண்டிகாதேவி
70 - சோமேஸ்வரத்தில் வராரோகை
71 - பிரபாசத்தில் புஷ்கராவதி
72 - மகாலயத்தில் மகாபாகை
73 - சரசுவதி நதித்தலத்தில் தேவமாதை
74 - பயோஷணியத்தில் பிங்களேஸ்வரி
75 - கிருத சௌக்யத்தில் சிம்மாகை
76 - கார்த்திகையில் ஆதிசங்கரி
77 - உற்பலாவர்தத்தில் லோலாதேவி
78 - சோணசங்கமத்தில் சுபத்திரா
79 - சித்தவதனத்தில் லஷ்மி
80 - பரதாசிரமத்தில் அனங்கை
81 - ஜாலந்தரத்தில் விஸ்வமுகி
82 - கிஷ்கிந்தமலையில் தாராதேவி
83 - தேவதாரு வனத்தில் யுஷ்டிர்மேதை
84 - காஷ்மீரத்தில் பீமாதேவி
85 - ஹிமாத்திரியில் துஷ்டிவிஸ்வேஸ்வரி
86 - கபால மோசனத்தில் சுத்தி
87 - காயாரோகணத்தில் மாதாதேவி
88 - சங்கோத்தரத்தில் தாரா
89 - பிண்டாரக ஆலயத்தில் திருதி
90 - சந்திரபாகா நதியில் கலாதேவி
91 - அச்சோதயத்தில் சிவதாரணி
92 - வேணீயாற்றில் அமுதாதேவி
93 - பதரியில் உரசி
94 - உத்தரகிரியில் ஔஷதை
95 - குசத்வீபத்தில் குசோதகாதேவி
96 - ஏமகூடத்தில் மன்மதை
97 - குமுதத்தில் சத்தியத்வாதினி
98 - அஸ்வத்தில் வந்தினி
99 - குபோலயத்தில் நிதிதேவி
100 - தேவமுகத்தில் காயத்திரி தேவி
101 - பிருமாமுகத்தில் சரஸ்வதி
102 - சிவ சந்நிதியில் பார்வதி தேவி
103 - தேவலோகத்தில் இந்திராணி
104 - சூரியபிம்பத்தில் பிரபாதேவி
105 - சப்த மாதர்களில் வைஷ்ணவி
106 - பதிவிரதைகளில் அருந்ததி
107 - அழகான மங்கையரில் திலோத்தமை
108 - சகலதேகிகளின் சித்தத்தில் சக்தி பிரம்மகலை.

இவற்றைத்தான் தேவியின் சக்திபீடங்கள் என அழைப்பர். தேவியின் இத்தனை சக்திபீடங்களையும் தரிசித்தோர் மிக மிகக் குறைவானோரே. எனவே முடிந்தால் தேவியின் இத்தனை சக்திபீடங்களையும் பக்தியோடு சென்று தரிசியுங்கள். சொல்லிலடங்கா அளவு புண்ணியம் உங்களுக்குக் கிட்டும். அந்த அன்னையின் அருள் இருந்தால் நிச்சயமாக உங்களால் மொத்த சக்திபீடங்களையும் தரிசிக்கமுடியும். சில பீடங்கள் தரிசிக்கமுடியாதவையாக உங்களுக்குத் தோன்றும். ஆனால் முடியாதது என்ற ஒன்று இவ்வுலகில் கிடையாது. அன்னையின் பரிபூரண அருள் உங்களுக்கு இருந்தால் அவளே அனைத்தையும் உங்களுக்குக் காட்டியருள்வாள்.

ஓம் சக்தி.

நன்றி - மயூரமங்கலம்.

search tags : shathipeedam, shathibeedam, shakthi, சக்திபீடங்கள்

2 comments:

ஸ்வாமி ஓம்கார் said...

திரு அடியார்.

சில காரணங்களால் 51 சக்தி பீடங்களே உண்டு என சொல்லலாம்.

சமஸ்கிருத அக்‌ஷரங்கள் ஒவ்வொன்றும் ஒரு சக்தி பீடத்தை குறிக்கும். அவை அந்த சக்தியின் பீஜமந்திரங்களாக இருக்கிறது.

மொழிக்கும், அதன் எழுத்துக்கும் சக்தியூட்டிய கலாச்சாரம் நம்முடையது. அதனால்தான் அம்மொழி அழியா புகழுடன் இருக்கிறது.

சக்த பாரம்பரியத்தை சார்ந்தவர்கள் 51 சக்தி பீடத்தை தரிசிக்கிறார்கள்.

உங்கள் தொகுப்பு அருமை. உங்கள் திருபணி மேம்பட வாழ்த்துக்கள்.

அடியார் said...

தங்கள் வருக்கைக்கும், நற்கருத்துக்கும் நன்றி ஸ்வாமி...

Post a Comment

Related Posts Widget for Blogs by LinkWithin