ஸ்தோத்திரங்கள், mp3 பாடல்கள், காணொளிகள் போன்றவற்றை இலகுவாகக் கண்டுகொள்ள, உருவாக்கப்பட்ட தொகுப்பினைக் கீழே காணலாம்.

"இலகுவான தொகுப்புக்கள்" என்பதை சொடுக்குவதன்(Click) மூலம் அனைத்துத் தொகுப்புக்களையும் நீங்கள் காணலாம்:

|| * இலகுவான தொகுப்புக்கள் * ||


BEST VIEW : <1280x720 (over 1280x720 Resolution)
-*-*-*-*-*-

Sunday, May 31, 2009

உண்மைஉண்மை

ஸ்ரீ ராமகிருஷ்ணரின் பொன்மொழிகள் மிகுந்த அர்த்தம் பொதிந்தவை. அனைவருக்கும் புரியும்படி மிக எளிமையாகச் சொல்லப்பட்டவை. அவற்றில் 'உண்மை' பற்றிய அவரின் பொன்மொழிகளை இப்போது பார்ப்போம்.


* பகவானிடம் ஹிருதய பூர்வமான பக்தி கொள்வாய். கபடவேஷத்தையும் ஏமாற்றுதலையும் விட்டுவிடு. குமாஸ்தா வேலை செய்பவராயிருந்தாலும், வியாபாரிகளாக இருந்தாலும் அவர்களும் கூட உண்மை பேசுவதிலிருந்து தவறுதலாகாது. உண்மையையே பேசுவதே கலியுகத்துக்கான தவமாகும்.

* ஒருவன் எப்போதும் சத்தியத்தையே பேசுகிறவனாக இருந்தாலல்லாமல் சத்திய ஸ்வரூபியாகிய ஈசுவரனைக் காணமுடியாது.

* மனிதன் ஸத்தியம் பேசுதலில் தவறக்கூடாது. அவ்விஷயத்தில் வெகு ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். எப்போதும் உண்மையே பேசிவந்தால் கடவுள் சாஷாத்காரத்தை அடையப்பெறலாம்.

* பொய் அனைத்தும் கெட்டவை. பொய் வேஷமும் கெட்டதே. உன் வேஷத்துக்குத் தகுந்தபடி மனம் இராமற்போனால், நீ பெரும் நாசமடைவாய். இப்படித்தான் ஒருவன் வஞ்சகனாகிறான்; பொய் பேசுவதிலும் பொய்க் காரியங்களைச் செய்வதிலும் உள்ள பயம் அவனுக்குப் போய்விடுகிறது.

* ஒரு மனிதனுக்குக் கடன் வெகு ஜாஸ்தியாகி விட்டது. அதனில் இருந்து தப்பித்துக்கொள்வதற்காக அவன் பைத்தியம் பிடித்தவன் போலப் பாசாங்கு செய்து கொண்டிருந்தான். வைத்தியர்களால் யாதொரு குணமும் உண்டாகவில்லை. மருந்து அதிகமாக உள்ளே செல்லச்செல்ல பாசாங்குப் பைத்தியமும் அதிகரித்தது. கடைசியாக, புத்திசாலியான வைத்தியன் ஒருவன் உண்மையைத் தெரிந்து கொண்டு போலிப் பைத்தியனைத் தனியாக அழைத்துப்போய், "அடே! நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்! ஜாக்கிரதை! பைத்தியம் என்று பாசாங்கு பண்ணிக்கொண்டிருந்தால், வாஸ்தவமாகவே உனக்குப் பைத்தியம் பிடித்துவிடும். இப்போதே உன்னிடம் சில பைத்தியக் குறிகள் தென்படுகின்றன" என்றான். இதைக்கேட்ட அம்மனிதன் பயந்து போய் பைத்தியமெனப் பாசாங்கு செய்வதை விட்டான். இடைவிடாது நீ எவ்விதம் இருப்பதாகக் காட்டிக்கொள்கிறாயோ, அவ்விதமாகவே ஆகிவிடுவாய்.


இப்பதிவோடு தொடர்புடைய பதிவு : சத்தியம்


search tags : sree ramakrishna paramahamsar, ramakrishna paramahamsar, Unmai, உண்மை, ராமகிருஷ்ணர், ராம கிருஷ்ண பரமஹம்சர்.

---

திருச்செந்தூர் கலிவெண்பாகுமரகுருபரர் அருளிய திருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா


பூமேவு செங்கமலப் புத்தேளும் தேறரிய
பாமேவு தெய்வப் பழமறையும் - தேமேவு 1

நாதமும் நாதாந்த முடிவும் நவைதீர்ந்த
போதமும் காணாத போதமாய் - ஆதிநடு 2

அந்தம் கடந்தநித்தி யானந்த போதமாய்ப்
பந்தம் தணந்த பரஞ்சுடராய் - வந்த 3

குறியும் குணமுமொரு கோலமுமற்று எங்கும்
செறியும் பரம சிவமாய் - அறிவுக்கு 4

அனாதியாய் ஐந்தொழிற்கும் அப்புறமாய் அன்றே
மானதிகளுக்கு எட்டா வடிவாய்த் - தனாதருளின் 5

பஞ்சவித ரூப பரசுகமாய் எவ்வுயிர்க்கும்
தஞ்சமென நிற்கும் தனிப்பொருளாய் - எஞ்சாத 6

பூரணமாய் நித்தமாய்ப் போக்குவரவும் புணர்வும்
காரணமும் இல்லாக் கதியாதித் - தாரணியில் 7

இந்திரசாலம் புரிவோன் யாரையும் தான்மயக்கும்
தந்திரத்தில் சாராது சார்வதுபோல் - முந்தும் 8

கருவின்றி நின்ற கருவாய் அருளே
உருவின்றி நின்ற உருவாய்த் - திரிகரணம் 9

ஆகவரும் இச்சை அறிவு இயற்ற லால்இயல
போகஅதி காரப் பொருளாகி - ஏகத்து 10

உருவம் அருவும் உருஅருவும் ஆகிப்
பருவ வடிவம் பலவாய் - இருள்மலத்துள் 11

மோகமுறும் பல்லுயிர்க்கு முத்திஅளித் தற்குமல
பாகமுறவே கடைக்கண் பாலித்துத் - தேகமுறத் 12

தந்த அருவுருவம் சார்ந்தவிந்து மோகினிமான்
பெந்த முறவே பிணிப்பத்து - மந்த்ரமுதல் 13

ஆறத்து வாவும் அண்டத்து ஆர்ந்தஅத்து வாக்களும்முற்
கூறத் தகும் சிமிழ்ப்பில் கூட்டுவித்து - மாறிவரும் 14

ஈரிரண்டு தோற்றத்து ஏழுபிறப்புள் யோனி என்பான்
ஆரவந்த நான்குநூ றாயிரத்துள் - தீர்வரிய 15

கண்மத்துக்கு ஈடாய்க் கறங்கும் சகடமும்போற்
சென்மித்து உழலத் திரோதித்து - வெந்நிரய 16

சொர்க்காதி போகமெலாம் துய்ப்பித்துப் பக்குவத்தால்
நற்காரணம் சிறிது நண்ணுதலும் - தர்க்கமிடும் 17

தொன்னூல் பரசமயம் தோறும் அதுவதுவே
நன்னூல் எனத்தெரிந்து நாட்டுவித்து - முன்னூல் 18

விரதமுத லாயபல மெய்த்தவத்தின் உண்மைச்
சரியைகிரி யாயோகம் சார்வித்து - அருள்பெருகு 19

சாலோக சாமீப சாரூபமும் புசிப்பித்து
ஆலோகம் தன்னை அகற்றுவித்து - நால்வகையாம் 20

சத்திநி பாதம் தருதற்கு இருவினையும்
ஒத்துவரும் காலம் உளவாகிப் - பெத்த 21

மலபரி பாகம் வருமளவில் பன்னாள்
அலமருதல் கண்ணுற்று அருளி - உலவாது 22

அறிவுக்கு அறிவாகி அவ்வறிவுக்கு எட்டா
நெறியில் செறிந்தநிலை நீங்கிப் - பிறியாக் 23

கருணை திருஉருவாய்க் காசினிக்கே தோன்றிக்
குருபரனென்று ஓர்திருப்பேர் கொண்டு - திருநோக்கால் 24

ஊழ்வினையைப் போக்கி உடலறுபத் தெட்டுநிலம்
ஏழும் அத்துவாக்கள் இருமூன்றும் - பாழாக 25

ஆணவமான படலம் கிழித்து அறிவில்
காணரிய மெய்ஞ்ஞானக் கண்காட்டிப் - பூணும் 26

அடிஞானத் தற்பொருளும் ஆன்மாவும் காட்டிக்
கடியார் புவனமுற்றும் காட்டி - முடியாது 27

தேக்குபர மானந்தத் தெள்ளமுதம் ஆகிஎங்கும்
நீக்கமற நின்ற நிலைகாட்டிப் - போக்கும் 28

வரவும் நினைப்பும் மறப்பும் பகலும்
இரவும் கடந்துஉலவா இன்பம் - மருவுவித்துக் 29

கன்மமலத் தார்க்குமலர்க் கண்மூன்றும் தாழ்சடையும்
வன்மழுவும் மானுமுடன் மால்விடைமேல் -மின்னிடந்துப் 30

பூத்த பவளப் பொருப்புஒன்று வெள்ளிவெற்பில்
வாய்த்தனைய தெய்வ வடிவாகி - மூத்த 31

கருமமலக் கட்டறுத்துக் கண்ணருள் செய்து உள்நின்று
ஒருமலத்தார்க்கு இன்பம் உதவிப் - பெருகியெழு 32

மூன்றவத்தை யும்கழற்றி முத்தருட னேஇருத்தி
ஈன்றபர முத்தி அடைவித்துத் - தோன்றவரும் 33

யானெனதென்று அற்ற இடமே திருவடியா
மோனபரா னந்தம் முடியாக - ஞானம் 34

திருஉருவா இச்சை செயலறிவு கண்ணா
அருளதுவே செங்கை அலரா - இருநிலமே 35

சந்நிதியா நிற்கும் தனிச்சுடரே; எவ்வுயிர்க்கும்
பின்னமற நின்ற பெருமானே - மின்னுருவம் 36

தோய்ந்த நவரத்நச் சுடர்மணியால் செய்த பைம்பொன்
வாய்ந்த கிரண மணிமுடியும் - தேய்ந்தபிறைத் 37

துண்டம்இரு மூன்றுநிரை தோன்றப் பதித்தனைய
புண்டரம் பூத்தநுதல் பொட்டழகும் - விண்ட 38

பருவமலரப் புண்டரிகம் பன்னிரண்டு பூத்தாங்கு
அருள்பொழியும் கண்மலர் ஈராறும் - பருதி 39

பலவும் எழுந்துசுடர் பாலித்தாற் போலக்
குலவு மகரக் குழையும் - நிலவுமிழும் 40

புன்முறுவல் பூத்தலர்ந்த பூங்குமுதச் செவ்வாயும்
சென்மவிடாய் தீர்க்கும் திருமொழியும் - வின்மலிதோள் 41

வெவ்வசுரர் போற்றிசைக்கும் வெஞ்சூர னைத்தடித்து
தெவ்வருயிர் சிந்தும் திருமுகமும் - எவ்வுயிர்க்கும் 42

ஊழ்வினையை மாற்றி உலவாத பேரின்ப
வாழ்வுதரும் செய்ய மலர்முகமும் - சூழ்வோர் 43

வடிக்கும் பழமறைகள் ஆகமங்கள் யாவும்
முடிக்கும் கமல முகமும் - விடுத்தலாகப் 44

பால இருள்துரந்து பல்கதிரில் சோதிவிடம்
வாச மலர்வதன மண்டலமும் - நேசமுடன் 45

போகமுறும் வள்ளிக்கும் புத்தேளிர் பூங்கொடிக்கும்
மோகம் அளிக்கும் முகமதியும் - தாகமுடன் 46

வந்தடியில் சேர்ந்தோர் மகிழ வரம்பலவும்
தந்தருளும் தெய்வமுகத் தாமரையும் - கொந்தவிழ்ந்த 47

வேரிக் கடம்பும் விரைக்குரவும் பூத்தலர்ந்த
பாரப் புயசயிலம் பன்னிரண்டும் - ஆரமுதம் 48

தேவர்க்கு உதவும் திருக்கரமும் சூர்மகளிர்
வேமக் குழைந்தணைந்த மென்கரமும் - ஓவாது 49

மாரி பொழிந்த மலர்க்கரமும் பூந்தொடையால்
சேர அணிந்த திருக்கரமும் - மார்பகத்தில் 50

வைத்த கரதலமும் வாமமருங் கிற்கரமும்
உய்த்த குறங்கில் ஒருகரமும் - மொய்த்த 51

சிறுதொடிசேர் கையும்மணி சேர்ந்ததடங் கையும்
கறுவுசமர் அங்குசம்சேர் கையும் - தெறுபோர் 52

அதிர்கே டகம்சுழற்றும் அங்கைத் தலமும்
கதிர்வாள் விதிர்க்கும் கரமும் - முதிராத 53

கும்பமுலைச் செவ்வாய்க் கொடியிடையார் வேட்டணைந்த
அம்பொன் மணிப்பூண் அகன்மார்பும் - பைம்பொன் 54

புரிநூலும் கண்டிகையும் பூம்பட் டுடையும்
அரைஞாணும் கச்சை அழகும் - திருவரையும் 55

நாதக் கழலும் நகுமணிப் பொற் கிண்கிணியும்
பாதத்து அணிந்த பரிபுரமும் - சோதி 56

இளம்பருதி நூறா யிரங்கொடி போல
வளந்தரு தெய்வீக வடிவம் - உளந்தனில்கண்டு 57

ஆதரிப்போர்க்கு ஆருயிராய் அன்பரகத் தாமரையின்
மீதிருக்கும் தெய்வ விளக்கொளியே - ஓதியஐந்து 58

ஓங்காரத்து உள்ளொளிக்கும் உள்ளொளியாய் ஐந்தொழிற்கும்
நீங்காத பேருருவாய் நின்றோனே - தாங்கரிய 59

மந்திரமே சோரியா வான்பதமே மாமுடியாத்
தொந்தமுறும் வன்னமே தொக்காகப் - பந்தனையால் 60

ஒத்த புவனத் துருவே உரோமமாத்
தத்துவங்க ளேசத்த தாதுவா - வைத்த 61

கலையே அவயவாக் காட்டும்அத்து வாவின்
நிலையே வடிவமா நின்றோய் - பலகோடி 62

அண்டம் உருவாகி அங்கம் சராசரமாய்க்
கண்டசக்தி மூன்றுட் கரணமாய்த் - தொண்டுபடும் 63

ஆவிப் புலனுக்கு அறிவு அளிப்ப ஐந்தொழிலும்
ஏவித் தனிநடத்தும் எங்கோவே - மேவ 64

வரும்அட்ட மூர்த்தமாம் வாழ்வேமெய்ஞ் ஞானம்
தரும்அட்ட யோகத் தவமே - பருவத்து 65

அகலாத பேரன்பு அடைந்தோர் அகத்துள்
புகலாகும் இன்பப் பொருப்பும் - சுகலளிதப் 66

பேரின்ப வெள்ளப் பெருக்காறும் மீதானம்
தேரின்ப நல்கும் திருநாடும் - பாரின்பம் 67

எல்லாம் கடந்த இருநிலத்துள் போக்குவரவு
அல்லாது உயர்ந்த அணிநகரும் - தொல்லுலகில் 68

ஈறும் முதலுமகன்று எங்குநிறைந்த ஐந்தெழுத்தைக்
கூறி நடாத்தும் குரகதமும் - ஏறுமதம் 69

தோய்ந்து களித்தோர் துதிக்கையினால் பஞ்சமலம்
காய்ந்த சிவஞானக் கடாக்களிறும் - வாய்ந்தசிவ 70

பூரணத்துள் பூரணமாம் போதம் புதுமலரா
நாரகத்துள் கட்டு நறுந்தொடையும் - காரணத்துள் 71

ஐந்தொழிலும் ஓவாது அளித்துயர்த்த வான்கொடியும்
வந்தநவ நாத மணிமுரகம் - சந்ததமும் 72

நீக்கமின்றி ஆடி நிழலசைப்பான் போல்புவனம்
ஆக்கி அசைத்தருளும் ஆணையும் - தேக்கமழ்ந்து 73

வீசும் பனுவல் விபுதர் தனித்தனியே
பேசும் தசாங்கமெனப் பெற்றோனே - தேசுதிகழ் 74

பூங்கயிலை வெற்பில் புனைமலர்ப்பூங் கோதையிடப்
பாங்குறையும் முக்கண் பரஞ்சோதி - ஆங்கொருநாள் 75

வெந்தகுவர்க்கு ஆற்றாத விண்ணோர் முறைக்கிரங்கி
ஐந்து முகத்தோடு அதோமுகமும் - தந்து 76

திருமுகங்கள் ஆறாகிச் செந்தழற்கண் ஆறும்
ஒருமுகமாய்த் தீப்பொறியாறு உய்ப்ப - விரிபுவனம் 77

எங்கும் பரக்க இமையோர் கண்டு அஞ்சுதலும்
பொங்கும் தழல்பிழம்பைப் பொற்கரத்தால் - அங்கண் 78

எடுத்தமைத்து வாயுலைக் கொண்டு ஏகுதினெய்று எம்மான்
கொடுத்தளிப்ப மெல்லக் கொடுபோய் - அடுத்ததொரு 79

பூதத் தலைவகொடு போதி எனத் தீக்கடவுள்
சீதப் பகீரதிக்கே சென்றுய்ப்பப் - போதொருசற்று 80

அன்னவளும் கொண்டமைதற்கு ஆற்றாள் சரவணத்தில்
சென்னியில் கொண்டு உய்ப்பத் திருஉருவாய் - முன்னர் 81

அறுமீன் முலையுண்டு அழுதுவிளை யாடி
நறுநீர் முடிக்கணிந்த நாதன் - குறுமுறுவல் 82

கன்னியொடும் சென்று அவட்குக் காதலுருக் காட்டுதலும்
அன்னவள்கண்டு அவ்வுருவம் ஆறிணையும் - தன்னிரண்டு 83

கையால் எடுத்தணைத்துக் கத்தனெனப் பேர்புனைந்து
மெய்யாறும் ஒன்றாக மேவுவித்துச் - செய்ய 84

முகத்தில் அணைத்துஉச்சி மோந்து முலைப்பால்
அகத்துள் மகிழ்பூத்து அளித்துச் - சகத்தளந்த 85

வெள்ளை விடைமேல் விமலன் கரத்தில் அளித்து
உள்ளம் உவப்ப உயர்ந்தோனே - கிள்ளைமொழி 86

மங்கை சிலம்பின் மணிஒன்ப தில்தோன்றும்
துங்க மடவார் துயர்தீர்ந்து - தங்கள் 87

விருப்பால் அளித்தநவ வீரருக்குள் முன்னோன்
மருப்பாயும் தார்வீர வாகு - நெருப்பிலிதித்து 88

அங்கண் புவனம் அனைத்தும் அழித்துலவும்
செங்கண் கிடாஅதனைச் சென்றுகொணர்ந்து - எங்கோன் 89

விடுக்குதி என்றுஉய்ப்ப அதன் மீதுவர்ந்து எண்திக்கும்
நடத்தி விளையாடும் நாதா - படைப்போன் 90

அகந்தை உரைப்பமறை ஆதி எழுத்தென்று
உகந்த பிரணவத்தின் உண்மை - புகன்றிலையால் 91

சிட்டித் தொழிலதனைச் செய்வதெங்ஙன் என்றுமுனம்
குட்டிச் சிறையிருத்தும் கோமானே - மட்டவிழும் 92

பொன்னம் கடுக்கைப் புரிசடையோன் போற்றிசைப்ப
முன்னம் பிரமம் மொழிந்தோனே -கொன்னெடுவேல் 93

தாரகனும் மாயத் தடங்கிரியும் தூளாக
வீரவடி வேல் விடுத்தோனே - சீரலைவாய்த் 94

தெள்ளு திரை கொழிக்கும் செந்தூரில் போய்க்கருணை
வெள்ளம் எனத்தவிசின் வீற்றிருந்து - வெள்ளைக் 95

கயேந்திரனுக்கு அஞ்சல் அளித்துக் கடல்சூழ்
மயேந்திரத்தில் புக்கு இமையோர் வாழச் - சயேந்திரனால் 96

சூரனைச் சோதித்தவரு கென்றுதடம் தோள்விசய
வீரனைத் தூதாக விடுத்தோனே - காரவுணன் 97

வானவரை விட்டு வணங்காமை யால்கொடிய
தானவர்கள் நாற்படையும் சங்கரித்துப் - பானு 98

பகைவன் முதலாய பாலருடன் சிங்க
முகனைவென்று வாகை முடித்தோய் - சகமுடுத்த 99

வாரிதனில் புதிய மாவாய்க் கிடந்தநெடும்
சூருடலம் கீண்ட சுடர் வேலோய் - போரவுணன் 100

அங்கம்இரு கூறாய் அடன்மயிலும் சேவலுமாய்த்
துங்கமுடன் ஆர்த்தெழுந்து தோன்றுதலும் - அங்கவற்றுள் 101

சீறும்அர வைப்பொருத சித்ரமயில் வாகனமா
ஏறி நடாத்தும் இளையோனே - மாறிவரு 102

சேவல் பகையைத் திறல்சேர் பதாகைஎன
மேவத் தனித்துயர்ந்த மேலோனே - மூவர் 103

குறைமுடித்து விண்ணம் குடியேற்றித் தேவர்
சிறைவிடுத்து ஆட்கொண்ட தேவே - மறைமுடிவாம் 104

சைவக் கொழுந்தே தவக்கடலே வானுதவும்
தெய்வக் களிற்றை மணம்செய்தோனே - பொய்விரவு 105

காமம் முனிந்த கலைமுனிவன் கண்ணருளால்
வாமமட மானின் வயிற்றுதித்துப் - பூமருவு 106

கானக் குறவர் களிகூரப் பூங்குயில்போல்
ஏனற் புனங்காத்து இனிதிருந்து - மேன்மைபெறத் 107

தெள்ளித் தினைமாவும் தேனும் பரித்தளித்த
வள்ளிக் கொடியை மணந்தோனே - உள்ளம் உவந்து 108

ஆறுதிருப் பதிகண்டு ஆறெழுத்தும் அன்பினுடன்
கூறும் அவர் சிந்தைகுடி கொண்டோனே - நாறுமலர்க் 109

கந்திப் பொதும்பர்எழு காரலைக்கும் சீரலைவாய்ச்
செந்திப் பதிபுரக்கும் செவ்வேளே - சந்ததமும் 110

பல்கோடி சன்பப் பகையும் அவமி|ருத்தும்
பல்கோடி விக்கினமும் பல்பிணியும் - பல்கோடி 111

பாதகமும் செய்வினையும் பாம்பும் பசாகம்அடல்
பூதமுதீ நீரும் பொருபடையும் - தீது அகலா 112

வெவ்விடமும் துட்ட மிருகமுதலாம் எவையும்
எவ்விடம் வந்து எம்மை எதிர்ந்தாலும் - அவ்விடத்தில் 113

பச்சைமயில் வாகனமும் பன்னிரண்டு திண்தோளும்
அச்சம் அகற்றும் அயில்வேலும் - கச்சைத் 114

திருவரையும் சீறடியும் செங்கையும் ஈராறு
அருள்விழியும் மாமுகங்கள் ஆறும் - விரிகிரணம் 115

சிந்தப் புனைந்த திருமுடிகள் ஓராறும்
எந்தத் திசையும் எதிர்தோன்ற - வந்திடுக்கண் 116

எல்லாம் பொடிபடுத்தி எவ்வரமும் தந்துபுகுந்து
உல்லாசமாக உளத்திருந்து - பல்விதமாம் 117

ஆசுமுதல் நாற்கவியும் அட்டாவ தானமும்சீர்ப்
பேசும் இயல் பல்காப் பியத் தொகையும் - ஓசை 118

எழுத்துமுத லாம்ஐந்து இலக்கணமும் தோய்ந்து
பழுத்த தமிழ்ப்புலமை பாலித்து - ஒழுக்கமுடன் 119

இம்மைப் பிறப்பில் இருவா தனைஅகற்றி
மும்மைப் பெருமலங்கள் மோசித்துத் - தம்மைவிடுத்து 120

ஆயும் பழைய அடியா ருடன்கூட்டித்
தோயும் பரபோகம் துய்ப்பித்துச் - சேய 121

கடியேற்கும் பூங்கமலக் கால்காட்டி ஆட்கொண்டு
அடியேற்கு முன்னின்று அருள். 122


திருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா முற்றிற்று.


search tags : Kalivenba, Kumarakurubarar, Lord Muruga, Lord Kanthan, கலிவெண்பா, குமரகுருபரர், முருகன், கந்தன்

Saturday, May 30, 2009

இலகுவான தொகுப்புக்கள்இலகுவான தொகுப்புக்கள்

ஒவ்வொரு தெய்வத்தின் தொகுப்பினையும் சொடுக்குவதன்(Click) மூலம் அந்தந்தத் தெய்வத்தின் தொகுப்புக்களைப் பார்வையிடமுடியும்.
'செல்க' என்பதைச் சொடுக்கவும்.(Click செய்யவும்)* அம்மன் தொகுப்பு : செல்க

* கந்தன் தொகுப்பு : செல்க

* சிவ தொகுப்பு : செல்க

* விநாயகர் தொகுப்பு : செல்க

* விஷ்ணு தொகுப்பு : செல்க


search tags : Thogupu, Thokupu, தொகுப்பு

அம்மன் தொகுப்புஇந்து முரசில் பதியப்பட்ட, அனைத்து அம்மன் சம்பந்தபட்ட ஸ்தோத்திரங்கள், mp3 பாடல்கள், காணொளிகள் ஆகியவற்றின் இலகுவாக்கப்பட்ட தொகுப்பினை இங்கே நீங்கள் காணலாம்:-
( 'செல்க' என்பதன் மீது சொடுக்கவும்.[Click செய்யவும்] )


* ஸ்தோத்திரம் *

அபிராமி அந்தாதி : செல்க


* mp3 பாடல்கள் *

அம்மன் mp3 பாடல்கள் - 1 : செல்க

அம்மன் mp3 பாடல்கள் - 2 : செல்க

அம்மன் mp3 பாடல்கள் - 3 : செல்க


* காணொளி (youtube Video) *

மதுரை சொக்கநாதர் சமேத மீனாட்சி அம்மன் கோயில் : செல்க


search tags : Amman, Durgai, mp3, அம்மன், தொகுப்பு, துர்க்கை

விநாயகர் தொகுப்புஇந்து முரசில் பதியப்பட்ட, அனைத்து விநாயகப்பெருமான் சம்பந்தபட்ட ஸ்தோத்திரங்கள், mp3 பாடல்கள், காணொளிகள் ஆகியவற்றின் இலகுவாக்கப்பட்ட தொகுப்பினை இங்கே நீங்கள் காணலாம்:-
( 'செல்க' என்பதன் மீது சொடுக்கவும்.[Click செய்யவும்] )


* ஸ்தோத்திரங்கள் *

விநாயகர் காரியசித்தி மாலை : செல்க

விநாயகர் அகவல் : செல்க

விநாயகர் சதுர்த்தி பூஜை மந்திரங்கள் (சமஸ்கிருதம்) : செல்க


* mp3 பாடல்கள் *

விரைவில்


* காணொளி (youtube Video) *

விரைவில்


search tags : Vinayagar, Pillayar, Ganapaty, mp3, பிள்ளையார், விநாயகர், தொகுப்பு

சிவ தொகுப்புஇந்து முரசில் பதியப்பட்ட, அனைத்து சிவபெருமான் சம்பந்தபட்ட ஸ்தோத்திரங்கள், mp3 பாடல்கள், காணொளிகள் ஆகியவற்றின் இலகுவாக்கப்பட்ட தொகுப்பினை இங்கே நீங்கள் காணலாம்:-
( 'செல்க' என்பதன் மீது சொடுக்கவும்.[Click செய்யவும்] )


* ஸ்தோத்திரம் *

திருவாசகம் (சிவபுராணம்) : செல்க

லிங்காஷ்டகம் (சமஸ்கிருதம் மற்றும் தமிழில்) : செல்க


* mp3 பாடல்கள் *

விரைவில்


* காணொளி (youtube Video) *

லிங்காஷ்டகம் : செல்க


search tags : Shivan, Lord Shiva, mp3, சிவபெருமான், தொகுப்பு

கந்தன் தொகுப்புஇந்து முரசில் பதியப்பட்ட, அனைத்து முருகப்பெருமான் சம்பந்தபட்ட ஸ்தோத்திரங்கள், mp3 பாடல்கள், காணொளிகள் ஆகியவற்றின் இலகுவாக்கப்பட்ட தொகுப்பினை இங்கே நீங்கள் காணலாம்:-
( 'செல்க' என்பதன் மீது சொடுக்கவும்.[Click செய்யவும்] )


* ஸ்தோத்திரங்கள் *

கந்தர்சஷ்டி கவசம் : செல்க

ஸ்ரீ ஸ்கந்தகுரு கவசம் : செல்க

ஸ்ரீ குமாரஸ்தவம் : செல்க

கந்தர் அனுபூதி : செல்க

சண்முக கவசம் : செல்க

திருச்செந்தூர் கலிவெண்பா : செல்க


* mp3 பாடல்கள் *

கந்தன் mp3 பாடல்கள் - 1 : செல்க

கந்தன் mp3 பாடல்கள் - 2 : செல்க

கந்தர் சஷ்டி கவசம் - செல்க

ஸ்கந்தகுரு கவசம் - செல்க


* காணொளி (youtube video) *

ஸ்ரீ ஸ்கந்தகுரு கவசம் : செல்க


search tags : Murugan, Kanthan, Lord Murugan, முருகன் தொகுப்பு

Friday, May 29, 2009

திருக்குறள் 31-40 (பொருளோடு)திருக்குறள் 31-40

அறத்துப்பால்

அறன் வலியுறுத்துதல்


சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு. - 31

அறம் ஒருவருக்கு வீடு பேறு என்கின்ற சிறப்பையும் செல்வங்களையும் கொடுக்கும். உயிர்களுக்கு அந்த அறம் தரும் ஆக்கம் போல வேறு நன்மை ஏது?.

அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு. - 32

ஒருவர் அறம் செய்வதனால் ஏற்படும் நன்மையான விளைவுகள் அதிகம். அந்த அறம் செய்வதை மறந்து திரிதலால் வரும் தீய விளைவுகளும் அதிகம்.

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும் வாயெல்லாம் செயல். - 33

எக்காலத்திலும் விட்டு விடாமல் தத்தமக்கு இயன்ற அளவில் தாம் செல்லும் இடங்களில் எல்லாம் அறச் செயல்களைப் போற்றிச் செய்தல் வேண்டும்.

மனத்துக்கண் மாசுஇலான் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற. - 34

ஒருவன் உள்ளத்தில் தூய்மையுடையவனாகக் குற்றமற்றுத் திகழ்வதே அறம் எனப்படும். ஏனையவை வெற்று விளம்பரங்களுக்காகச் செய்யப்படும் ஆரவாரத் தன்மைகளாகும், அறமாகாது.

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம். - 35

பொறாமை, ஆசை, கோபம், தீய சொல் என்ற நான்கு குற்றங்களையும் நீக்கித் தொய்வின்றித் தொடர்வதே அறமாகும்.

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை. - 36

முதுமைக்காலத்தில் செய்து கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்ய வேண்டும். உடலில் இருந்து உயிர் அழியும் காலத்தில் அந்த அறம் அழியாத் துணையாக வந்து நிற்கும்.

அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை. - 37

பல்லக்கைச் சுமப்பவனும் அதன் மேல் அமர்ந்து செல்பவனிடம் போய் அறத்தின் பெருமை இது என அறிவிக்க வேண்டாம்.

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியமைக்கும் கல். - 38

ஒருவன் அறம் செய்யத் தவறிய நாள்களே இல்லை என்னுமாறு நாள் தோறும் அறம் செய்வானாயின் அவ்வறமானது அவன் உடலோடு கூடும் பிறவி வழியை அடைக்கின்ற கல்லாகும்.

அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல. - 39

அறம் செய்வதன் மூலம் வருகின்ற இன்பமே சிறந்த இன்பமாகும். அறநெறிக்குப் புறம்பாக வரும் மற்றவை இன்பங்களும் புகழும் இல்லாதவை.

செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி. - 40

ஒருவன் தான் தன் வாழ்நாளில் செய்ய வேண்டியது அறம் என்ற நல்வினையையே. செய்யாமல் ஒழிக்க வேண்டியது பழியையே.


இப்பதிவோடு தொடர்புடைய பதிவு : திருக்குறள் 21-30


search tags : Thirukural, Thiruvalluvar, திருக்குறள், திருவள்ளுவர்சண்முக கவசம்பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் (1853-1929 ) அருளிய சண்முக கவசம்


அறுசீர் அடி ஆசிரிய விருத்தம்

அண்டமாய் அவனி யாகி
அறியொணாப் பொருள தாகித்
தொண்டர்கள் குருவு மாகித்
துகளறு தெய்வ மாகி
எண்டிசை போற்ற நின்ற
என்னருள் ஈச னான
திண்டிறல் சரவ ணத்தான்
தினமும்என் சிரசைக் காக்க. 1

ஆதியாம் கயிலைச் செல்வன்
அணிநெற்றி தன்னைக் காக்க
தாதவிழ் கடப்பந் தாரான்
தான்இரு நுதலைக் காக்க !
சோதியாம் தணிகை யீசன்
துரிசிலா விழியைக் காக்க !
நாதனாம் கார்த்தி கேயன்
நாசியை நயந்து காக்க ! 2

இருசெவி களையும் செவ்வேள்
இயல்புடன் காக்க ! வாயை
முருகவேல் காக்க! நாப்பல்
முழுதுநல் குமரன் காக்க !
துரிசறு கதுப்பை யானைத்
துண்டனார் துணைவன் காக்க !
திருவுடன் பிடரி தன்னைச்
சிவசுப்ர மணியன் காக்க ! 3

ஈசனாம் வாகு லேயன்
எனதுகந் தரத்தைக் காக்க !
தேசுறு தோள்வி லாவும்
திருமகள் மருகன் காக்க !
ஆசிலா மார்பை ஈராறு
ஆயுதன் காக்க; என்றன்
ஏசிலா முழங்கை தன்னை
எழில்குறிஞ் சிக்கோன் காக்க ! 4

உறுதியாய் முன்கை தன்னை
உமையிள மதலை காக்க;
தறுகண் ஏறிடவே என்கைத்
தலத்தைமா முருகன் காக்க;
புறங்கையை அயிலோன்காக்க;
பொறிக்கர விரல்கள் பத்தும்
பிறங்குமால் மருகன் காக்க;
பின்முது கைச்சேய் காக்க. 5

ஊண்நிறை வயிற்றை மஞ்ஞை
ஊர்தியோன் காக்க; வம்புத்
தோள்நிமிர் கரேசன் உந்திச்
சுழியினைக் காக்க; குய்ய
நாணினை அங்கி கெளரி
நந்தனன் காக்க; பீஜ
ஆணியைக் கந்தன் காக்க;
அறுமுகன் குதத்தைக் காக்க. 6

எஞ்சிடாது இடுப்பை வேலுக்கு
இறைவனார் காக்க காக்க;
அஞ்சகனம் ஓரி ரண்டும்
அரன்மகன் காக்க காக்க;
விஞ்சிடு பொருட்காங் கேயன்
விளரடித் தொடையைக் காக்க;
செஞ்சரண் நேச ஆசான்
திமிருமுன் தொடையைக் காக்க. 7

ஏரகத் தேவன் என்தாள்
இருமுழங் காலும் காக்க;
சீருடைக் கணைக்கால் தன்னைச்
சீரலை வாய்த்தே காக்க;
நேருடைப் பரடுஇ ரண்டும்
நிகழ்பரங் கிரியன் காக்க;
சீரிய குதிக்கால் தன்னைத்
திருச்சோலை மலையன் காக்க. 8

ஐயுறு மலையன் பாதத்
தமர்பத்து விரலும் காக்க;
பையுறு பழநி நாத
பரன்அகம் காலைக் காக்க;
மெய்யுடல் முழுதும் ஆதி
விமலசண் முகவன் காக்க;
தெய்வ நாயக விசாகன்
தினமும்என் நெஞ்சைக் காக்க. 9

ஒலியெழ உரத்த சத்தத்
தொடுவரு பூத ப்ரேதம்
பலிகொள் இராக்க தப்பேய்
பலகணத்து எவையா னாலும்
கிளிகொள எனைவேல் காக்க;
கெடுபரர் செய்யும் சூன்யம்
வலியுள மந்த்ர தந்த்ரம்
வருந்திடாது அயில்வேல் காக்க ! 10

ஓங்கிய சீற்ற மேகொண்டு
உவணிவில் வேல்சூ லங்கள்
தாங்கிய தண்டம் எஃகம்
தடிபரசு ஈட்டி ஆதி
பாங்குடை ஆயுதங்கள் பகைவர்
என் மேலே ஒச்சின்
தீங்குசெய் யாமல் என்னைத்
திருக்கைவேல் காக்க காக்க ! 11

ஒளவியம் உளர், ஊன் உண்போர்
அசடர், பேய், அரக்கர், புல்லர்,
தெவ்வர்கள் எவரா னாலும்
திடமுடன் எனைமல் கட்டத்
தவ்வியே வருவார் ஆயின்
சராசரம் எலாம்பு ரக்கும்
கவ்வுடைச் சூர சண்டன்
கைஅயில் காக்க காக்க ! 12

கடுவிடப் பாந்தள் சிங்கம்
கரடிநாய் புலிமா யானை
கொடிய கோள்நாய் குரங்கு
கோலமார்ச் சாலம் சம்பு
நடையுடை எதனா லேனும்
நான்இடர்ப் பட்டி டாமல்
சடுதியில் வடிவேல் காக்க;
சானவி முளைவேல் காக்க ! 13

ஙகர மேபோல் தமீஇ
ஞானவேல் காக்க ! வன்புள்
சிகரிதேள் நண்டுக் காலி
செய்யன்ஏறு ஆலப் பல்லி
நகமுடை ஒந்தி பூரான்
நளிவண்டு புலியின் பூச்சி
உகமிசை இவற்றால் எற்குஓர்
ஊறிலாது ஐவேல் காக்க. 14

சலத்தில்உய் வன்மீன் ஏறு
தண்டுடைத் திருக்கை மற்றும்
நிலத்திலும் சலத்தி லும்தான்
நெடுந்துயர் தரற்கே யுள்ள
குலத்தினால் நான்வ ருத்தம்
கொண்டிடாது அவ்வவ் வேளை
பலத்துடன் இருந்து காக்க;
பாவகி கூர்வேல் காக்க. 15

ஞமலியம் பரியன் கைவேல்
நவக்கிர கக்கோள் காக்க;
சுமவிழி நோய்கள் தந்த
சூலை ஆக்கிராண ரோகம்
திமிர்கழல் வாதம் சோகை
சிரம்அடி கர்ண ரோகம்
எமையணு காம லேபன்
னிருபுயன் சயவேல் காக்க. 16

டமருகத்து அடிபோல் நைக்கும்
தலையிடி கண்ட மாலை
குமுறுவிப் புருதி குன்மம்
குடல்வலி ஈழை காசம்
நிமிரொணாது இருத்தும் வெட்டை
நீர்ப்பிர மேகம் எல்லாம்
எமையடை யாம லேகுன்
நெறிந்தவன் கைவேல் காக்க. 17

இணக்கம் இல்லாத பித்த
எரிவுமா சுரங்கள் கைகால்
முணக்கவே குறைக்கும் குட்டம்
மூலவெண் முளைதீ மந்தம்
சணத்திலே கொல்லும் சன்னி
சாமென் றறையும் இந்தப்
பிணிக்குலம் எனைஆ ளாமல்
பெருஞ்சத்தி வடிவேல் காக்க. 18

தவனமா ரோகம் வாதம்
சயித்தியம் அரோச கம்மெய்
சுவறவே செய்யும் மூலச்சூடு
இளைப்பு உடற்று விக்கல்
அவதிசெய் பேதி சீழ்நோய்
அண்டவா தங்கள் சூலை
எனையும்என் இடத்தெய் தாமல்
எம்பிரான் திணிவேல் காக்க. 19

நமைப்புறு கிரிந்தி வீக்கம்
நணுகிடு பாண்டு சோபம்
அமர்த்திடு கருமை வெண்மை
ஆகுபல் தொழுநோய் கக்கல்
இமைக்குமுன் உறுவ லிப்போடு
எழுபுடைப் பகந்த ராதி
இமைப்பொழு தேனும் என்னை
எய்தாமல் அருள்வேல் காக்க. 20

பல்லது கடித்து மீசை
படப டென்றே துடிக்கக்
கல்லினும் வலிய நெஞ்சம்
காட்டியே உருட்டி நோக்கி
எல்லினும் கரிய மேனி
எமபடர் வரினும் என்னை
ஒல்லையில் தார காரி
ஓம்ஐம் ரீம்வேல் காக்க ! 21

மண்ணிலும் மரத்தின் மீதும்
மலையிலும் நெருப்பின் மீதும்
தண்நிறை சலத்தின் மீதும்
சாரிசெய் ஊர்தி மீதும்
விண்ணிலும் பிலத்தின் உள்ளும்
வேறெந்த இடத்தும் என்னை
நண்ணிவந்து அருளார் சஷ்டி
நாதன்வேல் காக்க காக்க. 22

யகரமே போல்சூ லேந்தும்
நறும்புயன் வேல்முன் காக்க,
அகரமே முதலாம் ஈராறு
அம்பகன் வேல்பின் காக்க,
சகரமோடு ஆறும் ஆனோன்
தன்கைவேல் நடுவில் காக்க,
சிகரமின் தேவ மோலி
திகழ்ஐவேல் கீழ்மேல் காக்க. 23

ரஞ்சித மொழிதே வானை
நாயகன் வள்ளி பங்கன்
செஞ்சய வேல்கி ழக்கில்
திறமுடன் காக்க, அங்கி
விஞ்சிடு திசையின் ஞான
வீரன்வேல் காக்க; தெற்கில்
எஞ்சிடாக் கதிர்கா மத்தோன்
இகலுடைக் கரவேல் காக்க. 24

லகரமே போல்கா ளிங்கன்
நல்லுடல் நெளிய நின்று
தகரமர்த் தனமே செய்த
சங்கரி மருகன் கைவேல்
நிகழெனை நிருதி திக்கல்
நிலைபெறக் காக்க; மேற்கில்
இகல்அயில் காக்க, வாயு
வினில்குகன் கதிர்வேல் காக்க. 25

வடதிசை தன்னில் ஈசன்
மகன்அருள் திருவேல் காக்க;
விடையுடை யீசன் திக்கில்
வேதபோதகன்வேல் காக்க;
நடக்கையில் இருக்கும் ஞான்றும்
நவில்கையில் நிமிர்கையில் கீழ்க்
கிடக்கையில் தூங்கும் ஞான்றும்
கிரிதுளைத் துளவேல் காக்க. 26

இழந்து போகாத வாழ்வை
ஈயும் முத்தையனார் கைவேல்
வழங்கும் நல்லூண் உண்போதும்
மால்விளை யாட்டின் போதும்
பழஞ்சுரர் போற்றும் பாதம்
பணிந்து நெஞ்சு அடக்கும் போதும்
செழுங்குணத் தோடே காக்க;
திடமுடன் மயிலும் காக்க. 27

இளமையில் வாலிபத்தில்
ஏறிடு வயோதி கத்தில்
வளர்அறு முகச்சி வன்தான்
வந்தெனைக் காக்க காக்க.
ஒளியெழு காலை முன்எல்
ஓம்சிவ சாமி காக்க.
தெளிநடு பிற்ப கல்கால்
சிவகுரு நாதன் காக்க. 28

இறகுடைக் கோழித் தோகைக்கு
இறைமுன் இராவில் காக்க;
திறலுடைச் சூர்ப்ப கைத்தே
திகழ்பின் இராவில் காக்க;
நறவுசேர் தாள்சி லம்பன்
நடுநிசி தன்னில் காக்க;
மறைதொழு குழகன் எம்கோன்
மாறாது காக்க காக்க. 29

இனமெனத் தொண்ட ரோடும்
இணக்கிடும் செட்டி காக்க;
தனிமையில் கூட்டந் தன்னில்
சரவண பவனார் காக்க;
நனியனு பூதி சொன்ன
நாதர்கோன் காக்க; இத்தைக்
கனிவொடு சொன்ன தாசன்
கடவுள்தான் காக்க வந்தே. 30

திருச்சிற்றம்பலம்.


இப்பதிவோடு தொடர்புடைய பதிவு : ஸ்ரீ குமாரஸ்தவம்

search tags : Lord Murugan, Sanmuga kavasam, Shanmuga kavasam, Paamban Swami, சண்முக கவசம், பாம்பன் சுவாமிகள்

Wednesday, May 27, 2009

கந்தன் mp3 பாடல்கள்-2
கந்தன் mp3 பாடல்கள்

பகுதி - 2


* செந்தூர் முருகனின் கோயிலிலே : தரவிறக்க (Download)

* ஆறுபடைவீடு கொண்ட திருமுருகா : தரவிறக்க

* உனைப்பாடும் தொழிலின்றி வேறு இல்லை : தரவிறக்க

* மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன் : தரவிறக்க

* அன்று கேட்பவன் அரசன் மறந்தால் நின்று கேட்பவன் : தரவிறக்க

* எந்தன் குரலில் இனிப்பதெல்லாம் கந்தன் குரலே : தரவிறக்க

* எனக்கும் இடம் உண்டு அருள் மணக்கும் முருகனின் : தரவிறக்க

* தந்தையுடன் அன்னை செய்த தவம் போலும் : தரவிறக்க

* அரும்புகள் அசைந்திடும் கொடிகளில் : தரவிறக்க

* செந்தூர் செல்லும் தென்றல் காற்றே : தரவிறக்க

* இசையால் வசமாகா இதயம் எது : தரவிறக்க

* உன்னையும் மறப்பதுண்டோ மறந்தால் : தரவிறக்க

* அன்னை எனும் உறவுகூட புதியது : தரவிறக்க

* செந்தூரில் அலை ஓசை சங்கீதம் : தரவிறக்க


இப்பதிவோடு தொடர்புடைய பதிவு : கந்தன் mp3 பாடல்கள்-1


search tags : Lord Muruga, Lord Kantha, Murugan mp3 songs, kanthan mp3 songs, murugan devotional songs, devotional songs, முருகன் mp3 பாடல்கள், கந்தன் mp3 பாடல்கள்

Tuesday, May 26, 2009

விநாயகர் சதுர்த்தி பூஜை மந்திரங்கள்விநாயகர் சதுர்த்திப் பூஜை மந்திரங்கள் :


விநாயகப் பெருமானுக்குரிய அங்க பூஜைக்குரிய நாமங்களும் அந்தந்த நாமங்களுக்குரிய அங்கங்களும்: ( இந்த நாமங்களை ஒவ்வொன்றாகச் சொல்லி பத்ரம், புஷ்பம், அறுகு ஆகியவற்றுள் ஏதாவதொன்றினால் அந்தந்த அங்கங்களில் அர்ச்சிக்க வேண்டும்)

ஓம் பார்வதீ நந்தநாய நம : - பாதௌ பூஜயாமி - கால்கள்

ஓம் கணேசாய நம : - குல்பௌ பூஜயாமி - கணுக்கால்கள்

ஓம் ஜகத் தாத்ரே நம : - ஜங்கே பூஜயாமி - பாதத்துக்கு மேல்

ஓம் ஜகத் வல்லபாய நம : - ஜானுனீ பூஜயாமி - முழங்கால்

ஓம் உமாபுத்ராய நம : - ஊரூ பூஜயாமி - தொடை

ஓம் விகடாய நம : - கடிம் பூஜயாமி - இடுப்பு

ஓம் குஹாக்ரஜாய நம : - குஹ்யம் பூஜயாமி - மறைவிடம்

ஓம் மஹத்தமாய நம : - மேட்ரம் பூஜயாமி - ஆண்குறி

ஓம் நாதாய நம : - நாபிம் பூஜயாமி - தொப்பூள்

ஓம் உத்தமாய நம : - உதரம் பூஜயாமி - வயிறு

ஓம் விநாயகாய நம : - வஷம் பூஜயாமி - மார்பு

ஓம் பாஸச்சிதே நம : - பார்ஸ்வௌ பூஜயாமி - இருபக்கங்கள்

ஓம் ஹேரம்பாய நம : - ஹ்ருதயம் பூஜயாமி - இதயம்

ஓம் கபிலாய நம : - கண்டம் பூஜயாமி - கழுத்து

ஓம் ஸ்கந்தாக்ரஜாய நம : - ஸ்கந்தௌ பூஜயாமி - தோள்கள்

ஓம் ஹரஸுதாய நம : - ஹஸ்தான் பூஜயாமி - முன்கைகள்

ஓம் ப்ரஹ்மசாரிணே நம : - பாஹுன் பூஜயாமி - மேற்கைகள்

ஓம் ஸுமுகாய நம : - முகம் பூஜயாமி - முகம்

ஓம் ஏகதந்தாய நம : - தந்தௌ பூஜயாமி - தந்தங்கள்

ஓம் விக்கினநேத்ரே நம : - நேத்ரே பூஜயாமி - கண்கள்

ஓம் சூர்ப்பகர்ணாய நம : - கர்ணௌ பூஜயாமி - காதுகள்

ஓம் பாலசந்த்ராய நம : - பாலம் பூஜயாமி - நெற்றி

ஓம் நாகாபரணாய நம : - நாஸிகாம் பூஜயாமி - மூக்கு

ஓம் கிரந்தனாய நம : - சுபுகம் பூஜயாமி - மோவாய்

ஓம் ஸ்தூலௌஷ்டாய நம : - ஒஷ்டௌ பூஜயாமி - மேலுதடு

ஓம் களன்மதாய நம : - கண்டௌ பூஜயாமி - கழுத்து

ஓம் கபிலாய நம : - கசான் பூஜயாமி - இடுப்பு

ஓம் சிவப்ரியாய நம : - சிரம் பூஜயாமி - தலை

ஓம் ஸர்வமங்களஸுதாய நம : - ஸர்வாண்யங்காணி பூஜயாமி - எல்லா அங்கங்களும்.


விநாயக பத்ர பூஜைக்குரிய இருபத்தொரு நாமங்களும், அவற்றுக்குரிய பத்திரங்களும்:

ஓம் உமாபுத்ராய நம : - மாசீபத்ரம் சமர்ப்பயாமி - மாசிப்பச்சை

ஓம் ஹேரம்பாய நம : - ப்ருஹதீபத்ரம் சமர்ப்பயாமி - கண்டங்கத்தரி

ஓம் லம்போதராய நம : - பில்வபத்ரம் சமர்ப்பயாமி - வில்வம்

ஓம் த்விரதானனாய நம : - தூர்வாம் சமர்ப்பயாமி - அறுகம்புல்

ஓம் தூமகேதவே நம : - துர்தூரபத்ரம் சமர்ப்பயாமி - ஊமத்தை

ஓம் ப்ருஹதே நம : - பதரீபத்ரம் சமர்ப்பயாமி - இலந்தை

ஓம் அபவர்க்கதாய நம : - அபாமார்க்கபத்ரம் சமர்ப்பயாமி - நாயுருவி

ஓம் த்வைமாதுராய நம : - துளசீபத்ரம் சமர்ப்பயாமி - துளசி

ஓம் கிரந்தனாய நம : - சூதபத்ரம் சமர்ப்பயாமி - மாவிலை

ஓம் கபிலாய நம : - கரவீரபத்ரம் சமர்ப்பயாமி - அலரி

ஓம் விஷ்ணுஸ்துதாய நம : - விஷ்ணுக்ராந்தபத்ரம் சமர்ப்பயாமி - விஷ்ணுகிராந்தி

ஓம் வடவே நம : - தாடிமீபத்ரம் சமர்ப்பயாமி - மாதுளை

ஓம் அமலாய நம : - ஆமலகீபத்ரம் சமர்ப்பயாமி - நெல்லி

ஓம் மஹதே நம : - மருவகபத்ரம் சமர்ப்பயாமி - மருக்கொழுந்து

ஓம் ஸிந்தூராய நம : - ஸிந்தூரபத்ரம் சமர்ப்பயாமி - நொச்சி

ஓம் கஜாநநாய நம : - ஜாதீபத்ரம் சமர்ப்பயாமி - மல்லிகை

ஓம் கண்டகளன்மதாய நம : - கண்டலீபத்ரம் சமர்ப்பயாமி - வெள்ளெருக்கு

ஓம் சங்கரீப்ரியா நம : - சமீபத்ரம் சமர்ப்பயாமி - வன்னி

ஓம் ப்ருங்கராஜத்கடாய நம : - ப்ருங்கராஜபத்ரம் சமர்ப்பயாமி - கரிசலாங்கண்ணி

ஓம் அர்ஜுனதந்தாய நம : - அர்ஜுனபத்ரம் சமர்ப்பயாமி - வெண்மருது

ஓம் அர்க்கப்ப்ரபாய நம : - அர்க்கபத்ரம் சமர்ப்பயாமி - எருக்கு


விநாயக புஷ்ப பூஜைக்குரிய இருபத்தொரு நாமங்களும் அவற்றுக்குரிய புஷ்பங்களும்:

ஓம் பஞ்சாஸ்ய கணபதியே நம : - புந்நாக புஷ்பம் சமர்ப்பயாமி - புன்னை

ஓம் மஹாகணபதியே நம : - மந்தார புஷ்பம் சமர்ப்பயாமி - மந்தாரை

ஓம் தீர கணபதயே நம : - தாடிமீ புஷ்பம் சமர்ப்பயாமி - மாதுளை

ஓம் விஷ்வக்ஸேன கணபதயே நம : - வகுள புஷ்பம் சமர்ப்பயாமி - மகிழ்

ஓம் ஆமோத கணபதயே நம : - அமருணாள புஷ்பம் சமர்ப்பயாமி - வெட்டிவேர்

ஓம் ப்ரமத கணபதயே நம : - பாடலீ புஷ்பம் சமர்ப்பயாமி - பாதிரி

ஓம் ருத்ர கணபதயே நம : - த்ரோண புஷ்பம் சமர்ப்பயாமி - தும்பை

ஓம் வித்யா கணபதயே நம : - துர்த்தூர புஷ்பம் சமர்ப்பயாமி - ஊமத்தை

ஓம் விக்ன கணபதயே நம : - சம்பக புஷ்பம் சமர்ப்பயாமி - செண்பகம்

ஓம் துரித கணபதயே நம : - ரஸால புஷ்பம் சமர்ப்பயாமி - மா

ஓம் காமிதார்த்தப்ரத கணபதயே நம : - கேதகீ புஷ்பம் சமர்ப்பயாமி - தாழை

ஓம் ஸம்மோஹ கணபதயே நம : - மாதவீ புஷ்பம் சமர்ப்பயாமி - முல்லை

ஓம் விஷ்ணு கணபதயே நம : - ஸம்யாக புஷ்பம் சமர்ப்பயாமி - கொன்றை

ஓம் ஈச கணபதயே நம : - அர்க்க புஷ்பம் சமர்ப்பயாமி - எருக்கு

ஓம் கஜாஸ்ய கணபதயே நம : - கல்ஹார புஷ்பம் சமர்ப்பயாமி - செங்கழுநீர்

ஓம் ஸர்வஸித்தி கணபதயே நம : - ஸேவந்திகா புஷ்பம் சமர்ப்பயாமி - செவ்வந்தி

ஓம் வீர கணபதயே நம : - பில்வ புஷ்பம் சமர்ப்பயாமி - வில்வம்

ஓம் கந்தர்ப்ப கணபதயே நம : - கரவீர புஷ்பம் சமர்ப்பயாமி - அலரி

ஓம் உச்சிஷ்ட கணபதயே நம : - குந்த புஷ்பம் சமர்ப்பயாமி - குண்டுமல்லி

ஓம் ப்ரஹ்ம கணபதயே நம : - பாரிஜாத புஷ்பம் சமர்ப்பயாமி - பவளமல்லி

ஓம் ஜ்ஞான கணபதயே நம : - ஜாதீ புஷ்பம் சமர்ப்பயாமி - மல்லிகை


விநாயகரின் இருபத்தொரு அறுகம்புல் அர்ச்சனைக்குரிய நாமங்கள்: (அறுகம்புல் இரண்டிரண்டாக அர்ச்சிக்க வேண்டும்.)

ஓம் கணாதிபாய நம:

ஓம் பாசாங்குசதராய நம:

ஓம் ஆகுவாஹனாய நம:

ஓம் விநாயகாய நம:

ஓம் ஈசபுத்ராய நம:

ஓம் ஸர்வஸித்திப்ரதாய நம:

ஓம் ஏகதந்தாய நம:

ஓம் இபவக்த்ராய நம:

ஓம் மூஷிகவாஹனாய நம:

ஓம் குமாரகுரவே நம:

ஓம் கபிலவர்ணாய நம:

ஓம் ப்ரஹ்மசாரிணே நம:

ஓம் மோதகஹஸ்தாய நம:

ஓம் ஸுரஸ்ரேஷ்டாய நாம:

ஓம் கஜநாஸிகாய நம:

ஓம் கபித்தபலப்ப்ரியாய நம:

ஓம் கஜமுகாய நம:

ஓம் ஸுப்ரஸன்னாய நம:

ஓம் ஸுராக்ரஜாய நம:

ஓம் உமாபுத்ராய நம:

ஓம் ஸ்கந்தப்ப்ரியாய நம:


பத்ரபூஜை, புஷ்பபூஜை முதலியவற்றில் பயன்படுத்தப்படும் பத்ரபுஷ்பங்களும், நாமங்களும் வெவ்வேறு புத்தகங்களில் வெவ்வேறு விதமாகக் காணப்படும்.

இருபத்தொரு பத்திரங்களுரைக்கும் தமிழ்ப்பாடலொன்றைக் கீழே காணலாம்.

மேதகு மாசிப்பச்சை நறுங்கையாந் தகரை
வில்வமுட னூமத்தை நொச்சி நாயுருவி
ஏதமில் கத்தரி வன்னி அலரிகாட் டாத்தி
எருக்குமரு துடன்மால்பே ரியம்பு காந்தி
மாதுளையே உயர்தேவ தாருமரு நெல்லி
மன்னுசிறு சண்பகமே கெந்தளி பாதிரியே
ஓதரிய அறுகிவையோர் இருபத் தொன்றும்
உயர்விநா யகசதுர்த்திக் குரைத்திடுபத் திரமே.


இப்பதிவோடு தொடர்புடைய பதிவு : விநாயக சதுர்த்தி விரதம்


நன்றி : விநாயக ஸ்தோத்திரங்கள்search tags : Vinayagar Sthothiram, Vinayagar Manthiram, Vinayagar Naamam, Vinayagar, Ganapathy, Ganapaty, Viratham, Sathurthi, விநாயகர் மந்திரங்கள், விநாயகர் ஸ்தோத்திரம், விநாயகர் நாமங்கள், கணபதி, விரதங்கள், சதுர்த்தி

Monday, May 25, 2009

விநாயகர் சதுர்த்தி விரதம்விநாயக சதுர்த்தி


விநாயக விரதங்களுள் மிக விசேஷமானது இந்த விரதம். இந்துக்கள் யாவரும் விரும்பி அநுஷ்டிக்கும் விரதம். விநாயகர் ஆலயங்களில் சிறப்பாகவும், ஏனைய ஆலயங்களில் பொதுவாகவும் இவ் விரதநாளிலே விசேஷ அபிஷேகம் பூஜை வழிபாடுகள் நிகழ்கின்றன. எனினும் இவ்விரதத்தினைப் பூஜை வழிபாடுகளுடன் இல்லங்களிலும் கைக்கொள்வது நன்று. விநாயகப்பெருமான் உற்பவமான தினம் இது என்பர்.

ஆவணிமாத வளர்பிறைச் சதுர்த்தித் திதியன்று இவ்விரதம் அநுஷ்டிக்கப்பட வேண்டும். மதியவேளையில் சதுர்த்தி நிற்றல் அவசியம்.

கந்தபுராணத்தில் சிறப்பித்துக் கூறப்படும் இந்த விரதமானது சூதமுனிவரால் பஞ்சபாண்டவருக்கு உபதேசிக்கப்பட்ட பெருமையை உடையது. துரியோதனனாதி கௌரவர்களின் கொடுமையினால் பாண்டவர்கள் வனவாசம் செய்ய நேர்கிறது. காட்டிலே மிகுந்த கஷ்டமும் மனவேதனையும் அடைந்திருக்கும் நிலையில் சூதமுனிவரை ஒருநாள் சந்திக்கின்றார்கள்.

அப்போது தருமர் தமது கஷ்டங்கள் நீங்கிச் சுகமாக வாழ வழிகேட்கிறார். அதற்கு வழியாக இந்த விநாயக சதுர்த்தி விரதத்தை உபதேசிக்கிறார் சூதமுனிவர். அது மட்டுமல்லாமல் இந்த விரதத்தை முன்பு அநுஷ்டித்துப் பயன்பெற்றவர்களின் வரலாற்றையும் எடுத்துக் கூறுகிறார்.

தமயந்தி நளனை மீண்டும் அடைந்ததும், கிருஷ்ணர் ஜாம்பவதியையும் சியமந்தகமணியையும் பெற்றுக்கொண்டதும், இராமன் சீதையை மீட்டதும், இந்திரன் அசுரப்பகையை வென்றதும், பகீரதன் கங்கையைப் பூமிக்குக் கொண்டுவந்ததும் இந்த விரத மகிமையினால்தான் என்று விளக்கினார்.

இதனைக்கேட்ட பாண்டவரும் முறைப்படி விநாயக விரதத்தைக் காட்டிலேயே அநுஷ்டித்து உரிய காலத்தில் ஆட்சி அதிகாரத்தைப் பெற்றனர். இஷ்ட சித்திகளைப் பெற, நினைத்த காரியசித்தியைப் பெற விரும்புவோர் இவ்விரதத்தைக் கைக்கொள்ளலாம்.

அதிகாலை துயிலெழுந்து நீராடி நித்திய கர்மாநுஷ்டானங்களை முடித்துக் கொண்டு பிரார்த்தனை வழிபாடுகள், ஆலய தரிசனம் முதலியவற்றில் ஈடுபடவேண்டும். மத்தியானம் ஒரு பொழுது உண்ணலாம். நல்லெண்ணெய் சேர்க்கக்கூடாது என்பது விதி. இரவு பட்டினி இருக்க முடியாதவர்கள் பால்பழம் அல்லது பலகாரம் உண்ணலாம்.

வீட்டிலே பூஜை வழிபாடுகளுடன் விரிவாக இந்த விரதமிருக்க விரும்புவோர் வீட்டிற்கு ஈசான திக்கில் பசும்சாணியால் மெழுகித் தூய்மையாக்கப்பட்டு வெள்ளைகட்டித் தயார் செய்யப்பட்ட ஓரிடத்தில் அல்லது பூஜை அறையிலே மாவிலை தோரணங்களாலும் சிறிய வாழைமரம் முதலியவற்றாலும் அலங்கரித்து அங்கு ஐந்து கும்பங்களை முறைப்படி ஸ்தாபித்து சித்த கணபதி, வித்தியா கணபதி, மோஷ கணபதி, மஹா கணபதி ஆகிய மூர்த்திகளைப் பிரதிஷ்டை செய்து பூஜைகளை நடத்தலாம்.

தத்தமக்குரிய புரோகிதரை அல்லது அருகிலுள்ள ஆலய அர்ச்சகரை அழைத்து இந்தப் பூஜையைச் செய்விக்கலாம். சங்கல்பத்துடன் ஆரம்பித்து பிராமண அநுக்ஜை, விக்னேஸ்வர பூஜை, புண்யாக வாசனம், பஞ்சகவ்யபூஜை முதலிய பூர்வாங்கக் கிரியைகளிலிருந்து ஆவாஹனாதி சர்வோபசார பூஜைகளையும் செய்து தீபாராதனை நமஸ்காரங்களுடன் நிறைவு செய்யலாம்.

விசேஷ நிவேதனங்களாக அறுசுவை உணவும், தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம் என்பனவும் சொல்லப்பட்டிருக்கின்றன. நாவற்பழம், விளாம்பழம், வாழைப்பழம், கரும்புத்துண்டு, வெள்ளரிப்பழம், அப்பம், மோதகம், கொழுக்கட்டை ஒவ்வொன்றிலும் இருபத்தொன்று என்ற எண்ணிக்கையில் படைத்து நிவேதனம் செய்ய வேண்டும். (வெள்ளரிப்பழத்தை இருபத்தொரு துண்டுகளாக நறுக்கி வைக்கலாம்)

விநாயக சதுர்த்தி பூஜையில் இன்னொரு முக்கிய அம்சம் இருபத்தொரு பத்திரம், இருபத்தொரு புஷ்பம், இருபத்தொரு அறுகம்புல் என்பவற்றால் தனித்தனியாக அர்ச்சித்தலாம். இறைவனை அவரது பலவித நாமங்களையும் சொல்லி ஓங்காரத்துடன் உச்சரித்து வணக்கம் செலுத்துவதே அர்ச்சனையாகும். ஒவ்வொரு நாமம் சொல்லும் போதும் ஒவ்வொரு பத்திரம் அல்லது புஷ்பம் சமர்ப்பித்தல் மரபு.

இவ்வித விசேஷ அர்ச்சனைக்குரிய நாமங்களும் அவற்றுக்குரிய பத்திர புஷ்பங்களின் பெயர்களும், அங்கபூஜைக்குரிய நாமங்களும், அங்கங்களும்(ஒவ்வொரு நாமங்களையும் சொல்லி மூர்த்தியின் திருவுருவத்தில் அல்லது படத்தில் அந்தந்த நாமத்துக்குரிய அங்கங்களில் பூவினால் அர்ச்சித்தல் அங்கபூஜையாகும்). அவற்றைக் காண இங்கே சொடுக்குங்கள். (Click here). விநாயர் சதுர்த்திப் பூஜை மந்திரங்கள்.


மாத சதுர்த்தி விரதம் :

மாதந்தோறும் வருகின்ற பூர்வபட்சச் சதுர்த்தி நாட்களும் விநாயகருக்குரிய விரத நாட்களே. சதுர்த்தி விரதம் எனப்படும் இந்த நாட்களிலும் விரதமிருப்பது மிக விசேஷமானதாகும். அவ்வாறு அநுஷ்டிக்க முடியாதவர்கள் விநாயக சதுர்த்தி எனப்படும் ஆவணிச் சதுர்த்தி நாளில் விரதமிருக்கலாம்.

மாதந்தோறும் விரதமிருக்க விரும்புவோர் ஆவணிச் சதுர்த்தியிலே பூஜை வழிபாடுகளுடன் சங்கல்பபூர்வமாக ஆரம்பித்து (இந்தக் காரணத்துக்காக இந்த விரதத்தை நான் இத்தனை வருடம் கைக்கொள்வேன் என்று சங்கல்பம் பூண்டு) முறைப்படி தவறாமல் தொடர்ந்து கைக்கொள்ளவேண்டும். இருபத்தொரு வருடம் விரதமிருப்பது நன்று. இயலாதெனின் ஏழுவருடங்கள் அநுஷ்டிக்கலாம். அல்லது இருபத்தொன்றுக்குக் குறையாமல் மாத சதுர்த்தி விரதமிருந்து அதையடுத்துவரும் ஆவணிச் சதுர்த்தியில் நிறைவு செய்யலாம்.


விரத உத்தியாபனம் :

குறிப்பிட்ட கால எல்லை முடிந்ததும் அதாவது தாம் கைக்கொள்வதாகக் கருதிய வருடம் நிறைவு பெற்றதும் முறைப்படி விரதத்தை முடித்து, விரதபலனைத் தருமாறு வேண்டுதல் செய்தலே விரதோத்யாபனமாகும்.

முன்பு கூறப்பட்ட விதமாக வீட்டிலே பூஜை வழிபாடுகள் செய்யும்போது தங்கம், வெள்ளி, செம்பு இவற்றில் ஏதாவதொரு உலோகத்தில் விநாயகர் திருவுருவத்தைச் செய்து வைத்து ஆவாகனம் செய்து பூஜை நடத்த வேண்டும். அன்று உபவாசமிருந்து மறுநாட்காலை புனர்பூஜையின் பின் (மீண்டும் பூஜை செய்தல்) உத்வாசனம் செய்து அர்ச்சகருக்குரிய தஷிணை தாம்பூலங்களுடன் உலோகப் பிரதிமையையும், கும்பப்பொருட்களையும், வேட்டி சால்வை முதலிய தானங்களையும் வழங்கி இதன்பின் மஹேஸ்வர பூஜை செய்து (சிவனடியார்களுக்குத் திருவமுது செய்வித்தல்) தாமும் காலை எட்டரை மணிக்கு முன்னதாகப் பாரணை செய்து விரத பூர்த்தி செய்யலாம்.

விரத உத்யாபன சமயத்தில் பூஜையை ஆரம்பிக்கும் போது "வ்ரதோத்யாபன காலே யதோக்தபல சித்யர்த்தம் விசேஷ பூஜாம் ஆசார்யமுகேன அஹம் அத்ய கரிஷ்யே " (விரதபூர்த்தி காலத்தில் சாஸ்திரத்தில் கூறியபடி விரதத்துக்குரிய பலன்கள் எனக்குச் சித்திக்க வேண்டுமெனக் கருதி இந்தப் பூஜையைச் செய்கிறேன்.) என்று சங்கல்பத்துடன் ஆரம்பித்து முடிவில் அர்ச்சகருக்குரிய தானம் வழங்கும் போது " ப்ரதிமாம் வஸ்த்ர சம்யுக்தாம் கும்போகரணைர்யுதாம், துப்யம் தாஸ்யாமி விப்ரேந்த்ர யதோக்த பலதோ பவ " (பிரதிமை, வஸ்திரங்கள், கும்பப்பொருட்கள் முதலிய தானங்களை மகிழ்ச்சியுடன் பிராமணோத்தமருக்கு வழங்குகிறேன், இவ்விரதத்திற்குச் சொல்லப்பட்ட பலன்கள் எனக்கு உண்டாகட்டும்.) என்று பிரார்த்திக்க வேண்டும்.

பூஜை முடிவில் கும்பத்தால் யஜமானுக்கு அபிஷேகம் செய்வித்தலும் சொல்லப்பட்டிருக்கிறது. உலோகப் பிரதிமை செய்வதற்கு வசதியில்லாதவர்கள் களிமண்ணால் செய்து வழிபட்டபின் அதனை நீர்நிலையில் விட்டு விடலாம்.

விரதோத்யாபன காலத்தில் இவ்வாறு வீட்டில் பூஜைகள் செய்ய வசதியில்லாதவர்கள் ஆலயத்துக்குச் சென்று அபிஷேகம், பூஜை, அர்ச்சனை, உற்சவம் முதலியன செய்வித்தபின் அல்லது குறைந்த பட்சம் விரதோத்யாபனத்துக்குரிய சங்கல்பத்துடன் சஹஸ்ர நாமார்ச்சனையாவது செய்து அர்ச்சகருக்குரிய தாம்பூல தஷிணைகள் தானங்கள் வழங்கி முன்கூறியவாறு விரதபலனைத் தருமாறு பிரார்த்தித்து விரத பூர்த்தி செய்யலாம்.


இப்பதிவோடு தொடர்புடைய பதிவு : விநாயகர் சதுர்த்திப் பூஜை மந்திரங்கள்


நன்றி : விரதங்கள் கைநூல்

search tags : Vinayagar Sathurthi, Viratham, Vinayagar Viratham, விநாயகர் சதுர்த்தி, விநாயக விரதங்கள், விரதம், Sathurthi, சதுர்த்தி)

இறைவன் இருக்கின்றாரா-2இறைவன் இருக்கிறாரா.......... (பகுதி-2)

எனக்கு மட்டும் துன்பம் ஏன்?

சென்ற பதிவில் இறைவன் இருக்கிறாரா என்பதைப் பற்றிப் பார்த்தோம். இறைவன் இருந்தால் எனக்கு மட்டும் ஏன் இத்தனை துன்பங்கள். இக் கேள்வி பலர் மனதில் உண்டு.

முன் வினைப்பயனைப் பற்றி நிச்சயம் அறிந்திருப்பீர்கள். நாம் சென்ற பிறப்பில் செய்த வினைகளின் பலனை இந்தப் பிறப்பில் நிச்சயம் அனுபவித்தே தீரவேண்டும். முற் பிறப்பில் அதிக நல்ல காரியங்களையும், புண்ணியங்களையும் செய்தவன் இப் பிறப்பில் அதற்கான நல்ல பலனை அனுபவிக்கின்றான். முற் பிறப்பில் தீய காரியங்களிலும், பாவச் செயல்களிலும் ஈடுபட்டவன் இப் பிறப்பில் அதற்கான தண்டனையை அனுபவிக்கின்றான்.

அப்படியானால் நான் முற்பிறப்பில் அதிக பாவச் செயல்களில் ஈடுபட்டேனா?, அதனால்தான் இப் பிறப்பில் எனக்குத் துன்பமா எனக் கேட்கலாம். இப் பிறப்பில் நாம் அனுபவிக்கும் துன்பத்திற்கு முன் வினையின் 50 % தான் காரணம். மீதி 50% இப் பிறப்பில் நம் செயற்பாடுகளைப் பொறுத்து அமைகின்றது.

முற் பிறப்பில் நாம் எத்தனை தவறுகள் செய்தோம், எவ் வகையான தவறுகள் செய்தோம் என்பதெல்லாம் அந்த ஆண்டவனுக்குத்தான் தெரியும். சாமானியர்களான நமக்குத் தெரியாது. நாம் சென்ற பிறப்பில் ஒரு பொய் சொல்லி இருந்தால் கூட அதற்கான பலனை இப் பிறவியில் அனுபவித்தே தீரவேண்டும். பொய் சொன்னதற்கான பலனையே அனுபவித்தாகவேண்டும் என்கின்றபோது, மற்றைய தவறுகளுக்கு என்ன சொல்வது. வினை விதைத்தவன் வினையை அனுபவித்தே தீரவேண்டும். இது விதி. ஆனால் நாம் இந்த முன் வினைப்பயனின் தாக்கத்தைக் குறைக்கமுடியும். அதாவது சென்ற பிறப்பிற் செய்த வினைக்கு வருந்தி இறைவனை உள்ளன்போடு வணங்குவதன் மூலம் தாக்கத்தைக் குறைக்கலாம். ஆனால் இறைவனை வணங்குவதன் மூலம் முன்வினைப்பயனின் தண்டனைகளில் இருந்து தப்பிவிடமுடியாது, அவற்றின் தாக்கத்தை மட்டுமே குறைக்கமுடியும். யாராக இருந்தாலும் வினைப் பயனில் இருந்து தப்பமுடியாது. அபூர்வமாக சிலர் ஞானகுருக்கள், சாதுக்கள், சித்தர்கள் போன்றோரால் வினைப்பயனில் இருந்து தப்பியுள்ளனர்.

சரி, இப்பிறப்பில் நாம் அனுபவிக்கும் துன்பங்களுக்கு முன்வினைப்பயனோடு, இப்பிறப்பில் நாம் செய்யும் செயல்களும் காரணமாகும். எப்படி என்றால் ஒரு குழந்தை மண்ணில் பிறக்கும் போது நல்ல குழந்தையாகவே உள்ளது. அது கள்ளம் கபடமற்றதாக இருக்கும். அதனால்தான் குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பார்கள். ஆனால் வளர வளர அதன் இயல்புகள் மாறி விடுகின்றது. தவறுகளைச் செய்ய ஆரம்பிக்கின்றது. அது நன்றாக வளர்ந்த பின் அதனிடத்தில் நிச்சயம் ஒரு சில தீயபழக்கங்களாவது இருக்கும். இதற்கான காரணங்களாகப் பலவற்றைக் கூறமுடியும். சமூகம்தான் அவனை இப்படியாக்கிவிட்டது என்று கூடக் கூறலாம். ஆனால் ஊசி இடங்கொடுக்காமல் நூல் எப்படி நுழையமுடியும். தீயபழக்கங்களை ஒரு மனிதன் விலக்கமுடியும். அதற்காகத்தான் ஆறாவது அறிவாக பகுத்தறிவு அவனுக்குத் தரப்பட்டுள்ளது. ஆனால் அவன் சிந்திக்காது தீயபழக்கங்கள் தன்னிடத்தில் குடியேற அனுமதித்துவிடுகின்றான். ஆக அவன் சிந்தித்திருந்தால் தீயபழக்கங்களில் இருந்து தப்பி இருக்கமுடியும். குழந்தையாக அவன் இருந்த போது நல்லவனாகத்தானே இருந்தான். பின்னர் சிந்திக்கத் தவறியதால்தான் தனக்குத் தானே கேட்டினை வரவழைத்தான்.

இதற்குச் சில உதாரணங்களைக் கூறமுடியும். ஒருவன் படிக்கும் காலத்தில். படிக்க அனைத்து வசதியிருந்தும், தேவையற்ற வேலைகளில் ஈடுபட்டுவிட்டு, பிற்காலத்தில் சரியான வேலை இல்லாது துன்பப்படும் போது முற்பிறவி பயனை மட்டும் குறை கூறுவதில் பயனில்லை. ஒரு விவசாயி தன் தோட்டத்தில் சரியான நேரம் அறிந்து பயிரிடாமலும், பயிரிட்டால் தோட்டத்தைக் கவனிக்காதும் விட்டால் எப்படி விளைச்சல் கிடைக்கும். விளைச்சல் கிடைக்காது போனபின்னர் முற்பிறவிப்பயனைக் குறை கூறுவதில் அர்த்தமில்லை. சிலர் சிகரெட் பிடிப்பது உடலுக்குக் கேடு என்று தெரிந்தேதான் பிடிப்பார்கள், பின்னர் கான்சர் வந்தால் " சே... முற்பிறப்பில் என்ன பாவம் செய்தோமோ, நமக்கு கான்சர் வந்திருச்சே " என்று சொன்னால் எவ்வளவு முட்டாள்த்தனம்.

மொத்தத்தில், வாழ்க்கையில் முன்னேறுவதற்கு நாம் எந்த முயற்சியும் செய்யாது இருந்துவிட்டுப் பின் முன்வினைப்பயனைக் குறை கூறுவது முட்டாள்த்தனம். இருப்பினும் சிலர் என்ன முயற்சி செய்தாலும் அது தோல்வியில்தான் முடிவடையும். அவர்களும் தொடர்ந்து முயற்சி செய்துபார்ப்பார்கள் ஆனால் முடிவு முன்போலத்தான் இருக்கும். இவர்கள் இறைவனை உள்ளன்போடு வழிபட்டு, முற்பிறப்பில் செய்த தவறுகளுக்குப் பிராயச்சித்தம் செய்தால் வாழ்வு சிறக்கும்.

ஆக எனக்கு மட்டும் துன்பம் ஏன் என்று கேட்பது தவறானது. மனிதர்களில் 99% ஆனோருக்கு ஏதாவதொரு கவலை இருக்கிறது. நாம் முற்பிறப்பிலும் இப்பிறப்பிலும் செய்த காரியங்களே நம் இன்பத்தினையும் துன்பத்தினையும் முடிவு செய்கின்றது. எனவே துன்பம் வரும்போது துவண்டுவிடாமல் இறைவனை மனதார வணங்கி துன்பத்தை இன்பமாக்கிக் கொள்ளுங்கள். "கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டார்". இது நம் முன்னோர் கூறியது.

முற்பிறவியிற் செய்த வினை எத்தனை தூரம் மனிதனை அலைக்கழிக்கிறது. இப்படி இருக்க இப்பிறப்பிலும் பாவ காரியங்களில் ஈடுபடவேண்டுமா?. மனிதன் வாழும் காலம் சொற்பமானது. அந்த சொற்ப வாழ்நாளில் நம்மால் முடிந்தவரை எல்லோருக்கும் நல்லது செய்யவேண்டும். நாம் இறந்த பின்னர் நம்மோடு வருவது காசு,பணம், தங்கம் அல்ல. நாம் செய்த பாவ,புண்ணியங்கள்தான்.

தொடரும் ...


இப்பதிவோடு தொடர்புடைய பதிவு : இறைவன் இருக்கின்றாரா...(பகுதி-1)


search tags : Article, God, Kadavul, Iraivan

Sunday, May 24, 2009

இராமாயணம்-1இராமாயணம்

பகுதி - 1

இந்த இராமாயணம் தெய்வத்திரு திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகளால் எழுதப்பட்டது. இதனைத் தொகுத்தவரான Dr. J. பெருமாள் M.B.A, Ph.D அவர்களுக்கும் என் நன்றிகள்.


கங்கை நதிபாயும் நீர் வளமும் திலவளமும் குடிவளமும் பொருந்திய நாடு கோசல நாடு. வளமை மிகுந்த இந்தக் கோசல நாட்டின் தலைநகரம் அயோத்தி என்ற திருநகராகும். இந்நகரத்தில் வாழும் மக்கள் மறந்தும் தீங்கு செய்யாதவர்கள். வறுமையால் வாடி யாசிப்பவர் இந்நகரில் இல்லாததால் தருமகுணசீலர்கள் அள்ளிக் கொடுக்கும் தன்மை இன்றி வாழ்ந்தனர். அயோத்தி என்ற சொல்லுக்கு யுத்தம் இல்லாத ஊர் என்று பொருள். இந்த நகரம் போரும் சினமும் இன்றிச் சாந்தி நிகேதனமாகத் திகழ்ந்தது. எல்லோரும் அனைத்து நலங்களும் பெற்று இன்புற்று வாழந்தார்கள்.

இந்த அயோத்திமா நகரை, ஆதித்தன் குலத்தில், அஜமகாராஜனுக்கும் இந்துமதிக்கும் மகனாகப் பிறந்த தசரதச் சக்ரவர்த்தி தாய்போல் மக்களுக்குத் தண்ணருள் புரிந்து அரசு புரிந்து வந்தார். பயிருக்குத் தண்ணீர் துணை புரிவது போலவும், உயிருக்கு உடம்பு ஆதாரமாக இருப்பது போலவும் மக்களுக்கு இம்மன்னவர் கருணை புரிந்து வந்தார். இவருடைய ஆட்சியிலே தருமம் தழைத்து ஒங்கியது. இவருடைய ஆட்சி மாட்சியுடன் விளங்கியது. பகைவர்களாலும், விலங்குகளாலும், கள்வர்களாலும் துன்பம் இன்றி மக்கள் இன்பம் பெற்று வாழந்தார்கள். தசரத மன்னருடைய கரங்கள் ஈந்து ஈந்து சிவந்தன. இவருக்குக் கௌசலை, கைகேயி, சுமித்திரை என்று மூன்று மனைவியர் இருந்தார்கள். இவருக்கு மக்கட்பேறு இல்லாமையினால் அவ்வப்போது வேறு வேறு மாதர்களைத் திருமணம் செய்து கொண்டார். அவ்வாறு செய்துகொண்ட பெண்கள் 360 பேராகும். இவர் அறுபதினாயிரம் ஆண்டுகள் அறநெறி வழுவாமல் நல்லற நாயகனாக நின்று அரசு புரிந்தார். மக்கள் மன்னரை நெஞ்சார நினைத்து வாயார வாழ்த்தினார்கள்.

தசரதர் தமக்குப் பின் தருமநெறி தவறhமல் தரணியை அரசு புரிய ஒரு மகன் பிறக்கவில்லையே என்று பெரிதும் வருந்தினார். தசரதர் நாட்டைக் காக்க நன்மகன் இல்லையே என்று வருந்துவது பொது நலமாகும். அரசவையில் தசரத சக்ரவர்த்தி, தமது குலகுருவாகிய வசிஷ்ட முனிவரை வணங்கி, குருநாதா! அடியேன் தங்கள் ஆசியினால் கடல் சூழ்ந்த இந்த உலகத்தில் பத்துத் திசைகளிலுமிருந்து வந்த பத்து ரதங்களை வென்று, தசரதன் என்று பேர் பெற்றேன், சம்பரனை வென்று இந்திரனுக்கு உதவி புரிந்தேன், ஆனால், அடியேனுக்கு மகப்பேறு வாய்க்கவில்லை தலைவனின்றி மக்கள் வருந்துவார்களே என்று எண்ணி அடியேன் வருந்துகின்றேன். தாங்கள் பிரம புத்திரர். தங்களை குருநாதராகக் கொண்ட எனக்கு இந்தக் குறை இருந்தால் அது தங்களுக்குத்தானே இழிவு? குழல், யாழ் என்ற இன்னிசைக் கருவிகளின் நாதங்களைக் கேட்கும் என் செவியில் அப்பா! என்று அழைக்கம் மழலைச் சொல் கேட்கும் பாக்கியம் பெற்றேனில்லை. வானளாவி வளர்ந்த மரம் பழுக்கவில்லையானால் அம்மரத்தால் யாது பயன்? என்னுடைய மனுக்குலத்தில் இதுவரை குழந்தையில்லாத மலட்டுத் தன்மை ஒருவருக்கும் இல்லை. பெரும் தவமுனிவராகிய தங்கள் சீடனாகிய எனக்கு இந்தக் குறை இருந்தால் அது தங்களுக்குத்தானே அவமானம் ? அடியேனுக்கு மகப்பேறு உண்டாகத் தேவரீர் அருள்புரிய வேண்டும் என்று கூறி முறையிட்டார்.

வசிட்ட முனிவர் ஊனக்கண்களை மூடினார். அப்பொழுது அவருக்கு ஞானக்கண் திறக்கப் பெற்றது. அதிலே கண்ட காட்சி அடியில் வருகின்றது.
திருமால் திருப்பாற்கடலில் அரவணையில் அறிதுயில் புரிகின்றார். இராவணாதி அரக்கர்களால் பலகாலமாகத் துன்பப்படுகின்ற பிரமாதி தேவர்கள் நாராயணரிடம் தஞ்சம் புகுந்து கருணைக்கடலே! கமலக்கண்ணா! நீலமேக வண்ணா! இராவணன் முதலிய அரக்கர்களால் நாங்கள் ஆலைக்கரும்புகோல் போல நொந்து வெந்து வருந்துகிறோம். நாங்கள் அரக்கர்களால் பஞ்சுபடாத பாடுபடுகின்றோம். அசுர குலத்தை அழித்து, நாங்கள் செழித்து வாழ அருள் புரியவேண்டுமென்று சரண் அடைந்தார்கள்.

திருமால் தேவர்களை நோக்கி அமரர்களே! நான் பூவுலகில் இராமனாக அவதரித்து இராவணாதி அரக்கர்களைத் தொலைத்து உங்கள் துயர் துடைத்து அருள்புரிவேன். இராவணன் பிரமதேவனிடம் வரம் பெறும் போது மனிதர்களையும், வானரங்களையும் சிறிய பிராணிகள் என்று விட்டு விட்டான். ஆகவே, நான் மனிதனாக வந்து அவதரிப்பேன். தேவர்களாகிய நீங்கள் முன்னதாகவே வானரங்களாகப் பிறந்து இருங்கள் என்று கட்டளையிட்டார்.

திருமாலின் கட்டளையின்படி வானவர்கள் வானரங்களாகப் பிறந்தார்கள். இந்திரன் வாலியாகப் பிறந்தான். சூரியன் சுக்கிரீவனாகப் பிறந்தான். அக்கினித்தேவன் நீலனாகப் பிறந்தான் ( நீலன் சேனைத் தலைவன் ). விசுவபிரம்மா நளனாகப் பிறந்தான், வாயுதேவன் அனுமனாகப் பிறந்தான். ருத்ராம்சமும் அதில் கலந்து நின்றது. உபேந்திரன் அங்கதனாகப் பிறந்தான்.
பிரமதேவர், நான் ஏற்கெனவே கரடிக் குழுத் தலைவன் ஜாம்பவந்தனாகப் பிறந்திருக்கிறேன் என்று கூறினார்.

தொடரும்...


Search tags : Ramayan, Ramayana, Ramayanam, Kirubanantha Variyaar, இராமாயணம், கிருபானந்தவாரியார்.

Friday, May 22, 2009

கந்தன் mp3 பாடல்கள்-1கந்தன் mp3 பாடல்கள்

பகுதி - 1


முருகப்பெருமானது mp3 பாடல்களை இப்பதிவில் நீங்கள் காணலாம். தரவிறக்கிக் கேட்டு மகிழுங்கள்.


* சரவணப் பொய்கையில் நீராடி உன்னை : தரவிறக்க (Download)

* சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா : தரவிறக்க

* திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா : தரவிறக்க

* பழம் நீயப்பா ஞானப்பழம் நீயப்பா தமிழ்ஞான : தரவிறக்க

* அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் : தரவிறக்க

* பழமுதிர்ச்சோலையிலே தோழி பார்த்தவன் : தரவிறக்க

* முத்தைத்தரு பத்திச் சரவண : தரவிறக்க

* திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும் : தரவிறக்க

* மனமே முருகனின் மயில் வாகனம் : தரவிறக்க

* வேலோடு விளையாடும் முருகையா : தரவிறக்க


search tags : Lord Muruga, Lord Kantha, Murugan mp3 songs, kanthan mp3 songs, murugan devotional songs, devotional songs, முருகன் mp3 பாடல்கள், கந்தன் mp3 பாடல்கள்

Thursday, May 21, 2009

இறைவன் இருக்கின்றாரா - 1இறைவன் இருக்கின்றாரா......... (பகுதி - 1)

இது இன்று பலருடைய கேள்வி. இறைவன் இருக்கின்றாரா, இருந்தால் எனக்கு மட்டும் ஏன் துன்பம் மேல் துன்பம் வருகின்றது, இன்று நல்லோர் துன்பப்பட தீயோர் நன்றாக வாழ்கின்றனரே ஏன்? இப்படியாகக் கேள்விகள் பல. இதையெல்லாம் பார்க்கும் போது கடவுள் பக்தி மிகுந்தவர்கள் கூட சில வேளைகளில் தடுமாறி விடுகின்றனர். ஏன் இத்தனை கேள்விகள், தடுமாற்றங்கள்?

இறைவன் இருக்கின்றாரா...

ஆம், நிச்சயமாக இருக்கின்றார். இதனை ஸ்ரீ ராம கிருஷ்ண பரஹம்சர் ஒரு எளிய உதாரணத்தால் விளக்குகின்றார். இரவில் வானில் நாம் பல நட்சத்திரங்களைப் பார்க்கின்றோம். ஆனால் பகலில் அவை சூரியனது ஒளியால் நமக்குத் தெரிவதில்லை. ஆக பகலில் நாம் நட்சத்திரங்களைப் பார்க்காததால் நட்சத்திரங்களே இல்லை எனக் கூறிவிடமுடியுமா?. பகலிலும் அவை அதே வானில்தான் இருக்கின்றன, ஆனால் நம்மால்தான் பார்க்கமுடிவதில்லை. எனவே நாம் நட்சத்திரங்களே இல்லை எனக் கூறமுடியாது. அப்படிக் கூறினால் அது நமது அறியாமையே தவிர வேறெதுவும் இல்லை.

ஸ்ரீ ராம கிருஷ்ண பரஹம்சர், சுவாமி விவேகானந்தர் போன்ற நாடறிந்த பக்திமான்கள் இறைவனைக் கண்டவர்கள். ஸ்ரீ ராம கிருஷ்ண பரஹம்சர் அன்னை ஜெகன்மாதாவையும், இறைதூதர் அல்லாவையும், இறைதூதர் இயேசுவையும் கண்டவர். விவேகானந்தர் கூட அன்னை ஜெகன்மாதாவைக் கண்டவர்தான். இவர்கள் கண்ட தெய்வங்கள் எல்லாம் வெறும் மாயையா?. உதாரணத்திற்காகத்தான் நாமெல்லோரும் அறிந்த இவ்விருவரையும் கூறினேன். இன்னும் எத்தனையோ சாதுக்களும், துறவிகளும் இறைவனை நேரில் கண்டுள்ளார்கள். அவர்கள் கண்டதும் வெறும் மாயையா?. இல்லை, அவர்கள் மிகுந்த சிரத்தையெடுத்து பல முயற்சிகள் செய்து இறைவனைக் கண்டார்கள்.

நாம் எந்த முயற்சியும் செய்யாமல் இருந்தால் எப்படி இறைவனைப் பார்க்க முடியும். மகான்கள் செய்த முயற்சி போல் எந்த முயற்சியும் செய்யாது இருந்து விட்டு, இறைவன் இல்லை என்று கூறுதல், நட்சத்திரம் இல்லை என்று கூறுவது போலத்தான்.

சாதுக்கள், துறவிகள் மட்டுமல்ல புகழ்பெற்ற விஞ்ஞானிகள் கூட இறைவன் இருக்கிறார் என்று கூறியுள்ளனர். அவர்கள் தங்கள் சிந்தனைக்கும் அப்பாற்பட்ட ஒரு மாபெரும் சக்தி உண்டெனக் கூறியுள்ளார்கள். அந்த மாபெரும் சக்திதான் நாம் வணங்கும் இறைவன். இறைவனால்தான் இந்தப் பிரபஞ்சமே ஒரு ஒழுங்கில் இயங்குகின்றது. இறைவனது சக்தி இல்லையேல் இந்த ஒழுங்கு இருக்குமா?.

எந்த ஒரு பொருளினதும் தொடக்கத்தினையும் ஆராய்ந்தால் அது அந்த இறைவனது சக்தியை நோக்கியே செல்லும். உதாரணமாக ஒரு மரத்தின் விதையினை எடுத்துக்கொள்வோம். ஏதாவது ஒரு தாய்மரத்தில் இருந்து அந்த விதை வந்திருக்கும். அந்த விதையினுள் ஒரு மரம் உருவாவதற்கான அனைத்து மூலக்கூறுகளுமே இருக்கும். சரியான சந்தர்ப்பம் உருவாகும்போது அந்த விதை முளை விட்டு, சிறு தாவரமாகிப் பின்னர் பெரிய மரமாக மாறுகின்றது. ஒரு விதையினுள் இத்தனை சூட்சுமங்களை வைத்தது யார்?. வைத்தவன் அந்த இறைவன். நம்மால் இப்படி ஒரு விதையினை உருவாக்கமுடியுமா?. முடியாது, ஏற்கனெவே இருக்கும் விதைகளைக் கலந்து ஒரு புது விதையினை வேண்டுமானால் உருவாக்கலாம். ஆனால் நாம் உருவாக்கும் புது விதையின் ஆதாரம், இறைவன் படைத்த அந்தப் பழைய விதைதான். இதைத்தான் நம் முன்னோர்கள் "அவனின்றி ஓர் அணுவும் அசையாது " என்றார்கள்.

இங்கு நாம் கண்டுபிடிக்கும் பொருட்கள் அத்தனையுமே ஏற்கனவே இங்கு இருப்பவைதான். ஏற்கனவே இங்கு இருக்கும் மூலக்கூறுகளை விதம் விதமாகக் கலந்து புதிய பொருட்களை உருவாக்குகிறார்கள். நாமே முற்றுமுழுதாக ஒரு பொருளை உருவாக்கிவிடுவதில்லை. நம்மால் ஒரு மூலக்கூறினைக் கூட உருவாக்க முடியாதுள்ளபோது, இத்தனை மூலக்கூறுகளையும் படைத்தது யார்?. அதுதான் இறைவன்.

முடிவாக, இறைவன் அன்றும் இன்றும் என்றும் உள்ளவர். இறைவன் மேல் முழுநம்பிக்கையோடு அவனைக் காணமுயற்சி செய்யுங்கள். நிச்சயம் நீங்கள் அவனைக் காண்பீர்கள். இதை நான் கூறவில்லை. நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்.

தொடரும்...


இப்பதிவோடு தொடர்புடைய பகுதி : இறைவன் இருக்கின்றாரா...(பகுதி-2)

search tags : God, Iraivan, Article, கட்டுரைகள், இறைவன், கடவுள்


அம்மன் mp3 பாடல்கள் - 2அம்மன் mp3 பாடல்கள்

பகுதி - 2 (மாரியம்மன் பாடல்கள்)


அம்மனுடைய mp3 பாடல்களை இப் பதிவில் நீங்கள் காணலாம். தரவிறக்கிக் கேட்டு மகிழுங்கள்.


* புன்னைநல்லூர் மாரியம்மா புவனம் : தரவிறக்க (Download)

* மகமாயி சமயபுரத்தாயே : தரவிறக்க

* தாயே கருமாரி எங்கள் தாயே கருமாரி : தரவிறக்க

* மாரியம்மா எங்கள் மாரியம்மா : தரவிறக்க

* கருணையுள்ளம் கொண்டவளே கருமாரியம்மா : தரவிறக்க

* அம்பிகையைக் கொண்டாடுவோம் கருமாரி : தரவிறக்க

* செல்லாத்தா செல்ல மாரியாத்தா : தரவிறக்க

* அங்காளம்மா எங்கள் : தரவிறக்க

* வேர்க்காட்டில் வாழ்ந்திருக்கும் ஆதிபராசக்தி : தரவிறக்க

* வேர்க்காட்டில் வீற்றிருக்கும் வேதவல்லி : தரவிறக்க

* தேவி கருமாரியம்மா தேடி வந்தோம் : தரவிறக்க

* காலமெல்லாம் காத்திருந்தாலும் : தரவிறக்க

* கருணை வடிவானவளே கரம் குவித்தோம் : தரவிறக்க

* கற்பூர நாயகியே கனகவல்லி : தரவிறக்க


இப் பதிவோடு தொடர்புடைய பதிவு : அம்மன் mp3 பாடல்கள்-1


search tags : Amman mp3 Songs, Amman mp3 Paadalgal, Devotional Songs, அம்மன் பாடல்கள், அம்மன் mp3 பாடல்கள், சுவாமி பாடல்கள்

Wednesday, May 20, 2009

திருக்குறள் 21-30 (பொருளோடு)திருக்குறள் 21-30


அறத்துப்பால்

நீத்தார் பெருமைஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு -21

தாம் சார்ந்த ஒழுக்க நெறியில் தவறாது நின்று பிறவற்றைத் துறந்தவர்களின் பெருமைகளை விரும்பிப் போற்றிப் புகழ்வதே நூல்களின் துணிவாகும்.

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று -22

இது வரையான காலத்தில் இவ்வுலகில் பிறந்து இறந்தோரைக் கணக்கிட்டுக் கூறமுடியாது. அதே போல் பற்றற்ற ஞானிகளின் பெருமைகளையும் அளவிட்டுக் கூறமுடியாது.

இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறிங்கிற்று உலகு -23

பிறப்பு, வீடு எனும் இருவகைக் கூறுகளைத் தெரிந்து தெளிந்து அதற்கு ஏற்றால் போல் இங்கு அறவாழ்க்கை மேற்கொண்டோரின் பெருமைகளே உலகில் சிறந்தது.

உரெனென்னும் தோட்டியான் ஒரைந்தும் காப்பான்
வரெனென்னும் வைப்பிற்கோர் வித்து. -24

மனவலிமை எனும் அங்குசத்தால் ஐம்பொறிகள் என்னும் யானையின் வேட்கையை அடக்கியவன் வீடு என்னும் உயர்ந்த நிலத்திற்கு விதை போன்றவன் ஆவான்.

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலும் கரி. -25

ஐம்புலன்களின் இன்ப ஆசைகளை அவித்து ஒழித்த வலிமைக்கு வானத்து தேவர்களின் அரசன் இந்திரனே சரியான சான்றாக அமைவான்.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். -26

எவராலும் செய்ய இயலாத அருமையான செயல்களைச் செய்து காட்டுகின்றவர்களே பெரியவர் ஆவர். அத்தகு செயல்களைச் செய்யும் ஆற்றல் இல்லாதவர் சிறியவராவர்.

சுவைஒளி ஊறுஓசை நாற்றமென்று ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு. -27

சுவைத்தல், பார்த்தல், உணர்தல், கேட்டல், முகர்தல் எனும் ஐந்து வகைக் கூறுகளையும் அறிந்து தெளிந்த அறிஞனுடைய அறிவில் உலகம் உள்ளது.

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும். -28

நிறைவு மிக்க பயன்மிகுந்த சொற்களைப் பேசிச் சிறந்த சான்றோரின் பெருமைகளை உலகத்துள் அவர்கள் அருளிச் சென்ற மறைமொழிகளே காட்டி நிற்கும்.

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது. -29

நற்பண்புகள் என்னும் குணங்களுடைய குன்றின் உச்சியில் நிற்கும் தவசீலர்கள் சினம் என்னும் கோபத்தை ஒரு கணப்பொழுதேனும் வைத்துக் காத்தல் அரிதாகும்.

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான். -30

அனைத்து உயிர்களிடமும் செம்மையான கருணையை மேற்கொண்டு ஒழுகும் அறம் கொண்டோரே அந்தணர் எனப்படுவர்.


இப் பதிவோடு தொடர்பான பதிவுகள் : திருக்குறள் 11-20


search tags : Thirukural, Thiruvalluvar, Arathu Paal, திருவள்ளுவர், திருக்குறள், அறத்துப்பால்

திருமணக் கிரியைகள்
திருமணக் கிரியைகள்

இந்து முறைப்படியான திருமணங்களின் போது பல கிரியைகள் செய்யப்படுவதை நீங்கள் கண்டிருப்பீர்கள். அவை ஏன் செய்யப்படுகின்றன என அறிவீர்களா, வாருங்கள் தெரிந்து கொள்ளலாம்.

திருமணம் என்பது வாழ்வில் முக்கியமானதொன்றாகும். இத் திருமணத்தின் போது நடைபெறக்கூடிய கிரியைகளில் பல கோயில் கிரியைகளில் நடைபெறுவதுதான். உதாரணமாக அனுஜ்ஜை, சங்கற்பம், பிள்ளையார் பூஜை, புண்ணிய யாகம், பஞ்சகவ்வியம், அங்குரார்ப்பணம், இரட்சாபந்தனம், கும்பபூஜை, ஓமம் வளர்த்தல், ஆகியவற்றைக் குறிப்பிடமுடியும்.

இவற்றினைத் தொடர்ந்து திருமணத்திற்குச் சிறப்பாகவுள்ள கிரியைகள் நடைபெறும். உதாரணமாக பிதிர்தேவர்களது ஆசிர்வாதம் பெறுதல், மணமகனுக்கு உபசாரம் செய்தல், கன்னிகாதானம், கூறை கொடுத்தல், தாலி கட்டுதல், அக்கினி பூஜை, பால்,பழம் கொடுத்தல், நவக்கிரக தானம், பசு தரிசனம், பாணிக்கிரகணம்(கையைப் பற்றுதல்), அம்மி மிதித்தல், அருந்ததி காட்டுதல், பிராயச்சித்தம், அக்கினியை வலம் வருதல், பெரியோர் வாழ்த்துதல் போன்றவற்றைக் குறிப்பிட முடியும்.

இக் கிரியைகளின் தத்துவங்களை அல்லது விளக்கத்தினைக் காணலாம் வாருங்கள்.

அரசாணி : திருமண மண்டபத்தில் சிவசக்தியின்(சிவம்+சக்தி) பாவனையில் அரசும் முருங்கும் நடப்படும். இதுவே அரசாணிமரம் எனப்படும்.

அனுஜ்ஜை : ஆரம்பிக்கும் கிரியையில் உள்ளத்தை உறுதி செய்தல். அதாவது மணமகன் திருமணம் செய்வதற்கும், ஆசாரியார் அதை நடத்துதற்கும் உள்ளத்தை உறுதி செய்தலே அனுக்ஜை ஆகும்.

விநாயகர் பூஜை : எந்தச் செயலும் இனிதே நடைபெறுவதற்கும் விநாயகரின் அருள் அவசியம் வேண்டும். அதே போல் திருமணக் கிரியைகளும் தடங்கலின்றி இனிதே நடைபெற விநாயகரின் அருளை வேண்டிச் செய்யப்படும் பூஜை.

ஆசமனம் : மணமகன் மூவகைத் தத்துவங்களையும் நினைத்து நீரை உட்கொள்ளல். இதனால் உள்ளம் தூய்மையாகி ஆன்மா அருள்வழி நிற்கும்.

புண்ணிய யாகம் : இடத்தையும் பொருளையும் சுத்தி செய்தல். இது பஞ்சகவ்வியம் கொண்டு செய்யப்படும்.

அங்குரார்ப்பணம் : நவதானியங்களை முளைப்பதற்காக இடுதல். இது மணமக்களுக்கு நன்மைகளும் எல்லாச் செல்வங்களும் கிடைத்தற் பொருட்டு செய்யப்படுவதாகும்.

இரட்சாபந்தனம் : இரட்சை என்றால் காப்பு, பந்தனம் என்றால் கட்டுதல். எனவே இரட்சாபந்தனம் என்றால் காப்பு கட்டுதல் எனப்பொருள்படும். இது மணமக்கள் பாவங்களிலிருந்து நீங்கித் தொடங்கிய கருமத்தினை இடையூறின்றி முடிக்கவும் இடையில் குற்றங்கள் எதுவும் நிகழாதிருக்கவும் அவர்களுக்கு கையில் கட்டப்படும்.

கும்ப பூஜை : இரட்சாபந்தனமான பின்னர் ஆசாரியார் முறைப்படி சிவனதும் சக்தியினதும் அருளைப் பெறுவதற்காகச் செய்யப்படும் கிரியையே கும்பபூஜை ஆகும்.

நவக்கிரக பூஜை : நம் வாழ்க்கைக்கும் நவக்கிரகங்களுக்கும் தொடர்பு உண்டு. புதிதாக வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் மணமக்களின் நவக்கிரக தோஷ பலத்தைக் குறைக்கவும், அவற்றால் ஏற்படும் குற்றங்களைப் போக்கியருளும்படியும் வேண்டி செய்யப்படும் பூஜை இது.

ஓமம் வளர்த்தல் : கும்பத்திலே பூஜித்த யாகேசுவரியின் (சிவன் சக்தி) அருளை நிலைபெறச் செய்வதற்காக ஓமகுண்டத்தில் அக்கினி காரியம் செய்யப்படும். இங்கு வளர்க்கும் அக்கினி 'சிவாக்கினி' எனப்படும். இச் சிவாக்கினி வாழ்க்கைக்கு வேண்டிய தூய அருளை நல்கும்.

பிதுரர் ஆசிர்வாதம் : நற்காரியங்களின் போது நம் முன்னோர்களின் ஆசிர்வாதத்தைப் பெறுவது நம் மரபு. அதே போல் திருமணத்தின் போதும், வாழ்க்கையினை ஆரம்பிக்க இருக்கும் மணமக்களின் முன்னோரை அழைத்து ஆசிர்வாதம் பெற இடம் பெறும் கிரியையே பிதுரர் கிரியை எனப்படும். இது மணமக்களின் தந்தையார்களால் செய்யப்படும். மணமக்களின் பாட்டன், பூட்டன் ஆகியோரின் பெயர்கள் கூறி ஆசி வேண்டப்படும்.

மணமகனுக்கு உபசாரம் : மணவறையில், மணமகனின் வலப்பக்கத்தில் மணமகளை இருத்தி இரட்சாபந்தனம் செய்த பின்பு, மணமகளின் தகப்பனார் கன்னிகாதானம் செய்வதற்காகச் சங்கற்பம் செய்து கொள்வார். பின்பு பட்டு வேட்டி சால்வையுடன் உபசாரப் பொருட்களை உபகாரமாக மணமகனுக்குக் கொடுப்பார்.

கன்னிகாதானம் : மணமகளின் தந்தை தம் மடியிலே மகளை இருத்தி அவளைத் தானமாகத் தாரை வார்த்து மணமகனின் கையில் அளிப்பார். தண்ணீரைத் தாரையோடு கொடுப்பதால் இது 'தாராதத்தம்' எனப்படும். கையில் நீர்விடுதல் ஒரு பொருளை இறுதியாகக் கொடுத்தலுக்கு அறிகுறி.

கூறை கொடுத்தல் : மணமகளின் திருமணச் சேலை, தாலி மற்றும் உபசாரப் பொருட்களை வைத்துச் சுத்தி செய்து பூஜித்த பின் பெரியோரினால் அவை ஆசிர்வதிக்கப்படும். பின்னர் மணமகன் மணமகளுக்கு உபசாரமாகக் கூறையைக் கொடுப்பார்.தாலி கட்டல் : தாலியில் சிவலிங்கம், விநாயர் அல்லது இலட்சுமியின் திருவுருவம் பொறிக்கப்படல் வேண்டும். மணமகனால் தாலிக்குத் தீபம் காட்டப்படும். தாலி கட்டுவதற்கு முன்னர் முகூர்த்தக் குற்றங்களைத் தீர்ப்பதற்காக தானம் செய்யப்படும். பின்னர் மணமகன், தன் குல தெய்வத்தின் பெயரை உச்சரித்துக் கொண்டு மணமகளின் கழுத்தில் தாலியைக் கட்டுவார். மணமகனின் சகோதரியார் முடிச்சினைப் போட மணமகனின் தாயார் தீபத்தைக் காட்டுவார். மணமகன், மணமகள் நெற்றி மீது குங்குமமும் விபூதியும் இடுவார். பின்னர் மணமகள் மணமகனின் இடதுபுறத்தில் அமர்த்தப்படுவார். இதனையடுத்து அக்கினி வளர்த்துப் பூஜை நடைபெறும்.

பால் பழம் கொடுத்தல் : தயிர், தேன், சர்க்கரை, நெய், பழம் சேர்த்துக் கொள்ளப்பட்ட பதார்த்தத்தை மணப்பெண் முதலில் மணமகனுக்கும், பின்னர் மணமகன் மணப்பெண்ணுக்கும் கொடுப்பார்கள். உயர்ந்த பதார்த்தங்களின் சுவை போன்று மணமக்கள் வாழ்வு முழுவதும் நலம் நிலவவேண்டும் என்பதற்காக இது வழங்கப்படுகிறது.

கோதரிசனம் : பசு புண்ணியத்தின் வடிவம். அதன் உடலில் அனைத்து கடவுளரும் தேவர்களும் வசிக்கிறார்கள். அப்புண்ணிய வடிவத்தைப் பார்த்தல் நல்லசகுனம். இதனால் வாழ்க்கையில் யாவும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை ஏற்படும்.

ஏழடி வைத்தல் : மணமகளுடைய கையை மணமகன் பிடித்துக் கொண்டு தோழி, தோழனுடன் அக்கினியை வலம் வருகையில் ஏழு அடி வந்ததும் அம்மி மிதித்தல் நடைபெறும். இது மூன்று முறை நடைபெறும். ஒவ்வொருமுறை வலம் வந்ததும் மணமகளின் சகோதரன் நெற்பொரியினை மணமக்கள் கையிற் கொடுப்பார். அவர்கள் அதனை அக்கினியில் இடுவார்கள். நெல் பொரியாக மலர்வது போன்று அவர்களுடைய வாழ்வும் வளம்பெற வேண்டும் என்பதே இதன் பொருள்.

ஏழு அடி வைத்தலின் தத்துவத்தைப் பார்ப்போம். இல்வாழ்க்கைக்கு வேண்டிய ஏழு பொருட்களைக் குறிக்கும், இவற்றைப் பெற இருவரும் ஒத்து முயற்சி செய்ய வேண்டும். அந்த ஏழு பொருட்களாவன, உணவுப்பொருள், உடற்பலம், கடவுள் வழிபாடு, மன அமைதி, அறிவு, காலத்திற்கு காலம் வாரும் பொருட்களும், அவற்றால் வரும் சுகங்களும், யாகத்திற்கு வேண்டிய துணைகள்.

அம்மி மிதித்தல் : மணமகன் மணமகளது வலதுகாலைத் தூக்கி அம்மி மீது வைப்பார். இதன் கருத்தானது பெண்ணாணவள் அந்த கல்லைப் போலத் தன்னுடைய நிலையில் இருந்து கற்புறுதியாக வாழ வேண்டும் என்பதாகும்.

பிராயச்சித்தம் : குற்றங்களைத் தீர்ப்பதற்காக பிராயசித்த ஓமமும், கிரியைகளின் நிறைவு குறித்துப் பூரணாகுதியும் நடைபெறும்.

அருந்ததி காட்டல் : இது ஒழுக்கம், கற்பு, பிறரை விழையாமை, உறுதிப்பாடு ஆகியவற்றின் உயர்வு குறித்துக் காட்டப்படும். இது பெண்ணுக்கு மாத்திரமன்றி ஆணுக்கும் உரியது.

ஆசிர்வாதம் : இறுதியாக ஆசாரியார் பூரணாகுதி செய்து மணமக்களை ஆசிர்வதிப்பார். அதன் பிற்பாடு நிறைவான பெரியோர் அறுகரிசி போட்டு ஆசிர்வதிப்பர். அறுகரிசி மங்கலப் பொருளாகும்.

திருமணக் கிரியைகள் ஆரம்பமுதல் வாழ்த்து நடைபெறும் வரை அனைவரையும் மகிழ்விக்க மங்கள வாத்தியங்கள் ஒலிக்கப்படும்.

அறுகெடுத்து வாழ்த்தும் வழக்கம் பண்டைய காலந்தொட்டே வழங்கி வருகிறது. உதாரணத்திற்கு சேக்கிழார் பெரிய புராணம் பாடி முடித்து யானை மீதமர்ந்து வீதியுலா வரும்போது அறுகெடுத்து வாழ்த்தப்படுகிறார்.

ஆரணங்கள் விரித்தோதி மாமறையோர் எதிர்கொண்டு
அறுகெடுப்ப வாழ்த்தெடுத்தார் அரம்பைக ளெல்லாம் - இவ்வாறு திருத்தொண்டர் புராண வரலாற்றில் கூறப்பட்டுள்ளது.

இந்த மரபு காலப்போக்கில் அறுகோடு நெல்லும் மலரும் கலந்து இடுதல் என்று மாறிற்று. பின்னர் நெல் அரிசியாகி அர்ச்சதை இடுதல் என்று ஆயிற்று. அறுகும் அர்ச்சதையும் மலரும் கலந்து வாழ்த்துதல், அட்சதையிடுதல் என்று இன்றைய வழக்கில் வழங்கக் காண்கின்றோம்.நன்றி : ஆன்மிக கிரியைகள், சைவ ஏடு, விரதங்களும் சடங்குகளும்.


search tags : Thirumanam, Thirumanam Sadanku, Thirumanam Kiriyai, திருமணம், திருமணச் சடங்கு, திருமணக் கிரியைகள்.

Tuesday, May 19, 2009

அம்மன் mp3 பாடல்கள் - 1அம்மன் mp3 பாடல்கள்.

பகுதி - 1 (மாரியம்மன் பாடல்கள்)

அம்மனுடைய mp3 பாடல்களை இப் பதிவில் நீங்கள் காணலாம். தரவிறக்கிக் கேட்டு மகிழுங்கள்.

* முத்துமாரி அம்மனுக்கு திருநாளாம் : தரவிறக்க (Download)

* கண்ணபுர நாயகியே மாரியம்மா : தரவிறக்க

* ஈஸ்வரியே மகமாயி மாரியம்மா : தரவிறக்க

* ஆடும் கரகம் எடுத்து ஆடி வருவோம் : தரவிறக்க

* ஆடி வெள்ளிக்கிழமை அன்று : தரவிறக்க

* சிவப்பு சேலை கட்டிக்கிட்டு வேப்பிலையும் : தரவிறக்க

* நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் : தரவிறக்க

* வேப்பமரத்தடியில் வீற்றிருக்கும் மாரியம்மா : தரவிறக்க

* தெய்வத்தின் தெய்வம் எங்கள் வேற்காட்டுமாரி : தரவிறக்க

* மகமாயி மனசு வச்சா மங்களமாய் : தரவிறக்க


இப் பதிவோடு தொடர்புடைய பதிவு : அம்மன் mp3 பாடல்கள்-2


search tags : Amman mp3 songs, Amman Devotional Songs, Amman mp3 Paadalgal, அம்மன் பாடல்கள், அம்மன் mp3 பாடல்கள்

Monday, May 18, 2009

உண்மையான சந்நியாசம்
உண்மையான சந்நியாசம்

ஒரு புருஷனும் அவன் மனைவியும் சந்நியாசம் பெற்றுக் கொண்டு, தீர்த்த யாத்திரைக்காக ஒன்று சேர்ந்து சென்றனர். ஒரு சமயம் அவர்கள் ஒரு காட்டு வழியே சென்று கொண்டிருந்தார்கள். முன்னதாக அக் கணவனும், பின்னே அவன் மனைவியுமாகச் சென்றனர். சற்றுத் தூரம் செல்கையில் முன்னே சென்ற கணவனுக்கு ஒரு வைரக்கல் தென்பட்டது.
ஒரு வேளை அந்த வைரக்கல்லைத் தன் மனைவி கண்டு, அதன் மேல் ஆசை கொண்டு தன் சந்நியாச பலத்தை இழந்துவிடுவாளோ என சிந்தித்தான். அதை அவள் கண்களில்படாமல் புதைத்து விடலாம் என முடிவெடுத்தான். அவள் அருகில் வருவதற்குள் புதைக்கவேண்டுமே என அவசர அவசரமாகத் தரையைத் தோண்டினான். ஆனால் மனைவி அருகில் வந்துவிட்டாள். " சுவாமி எதற்காக இத்தனை அவசரமாகத் தரையைத் தோண்டுகின்றீர்கள் ?" எனக் கேட்டாள். அவளிற்கு உண்மையைச் சொல்லாமல் ஏதோ மறைமுகமாகப் பதில் சொன்னான். இருப்பினும் அவன் மனைவிக்கு அவன் மனக்கருத்தைப் பற்றியும், வைரத்தினைப் பற்றியும் நன்றாக விளங்கியது. அதனால் அவன் மனதிற்படும்படி இப்படிக் கேட்டாள். " சுவாமி! வைரத்துக்கும், சாதாரண கல்லுக்கும் உள்ள வித்தியாசம் தங்களுக்கு இன்னும் தெரிகிறதானால் தாங்கள் ஏன் உலகத்தைத் துறந்து வந்தீர்கள்?. "

இது ஸ்ரீ ராம கிருஷ்ணரின் கதைகளில் ஒன்று. எத்தனை அர்த்தம் பொதிந்த கதை. இன்று பலர் இந்தக் கதையில் வரும் புருஷனைப் போலத்தான் இருக்கிறார்கள். மனதில் உலக ஆசைகளோடே துறவறம் மேற்கொள்கிறார்கள். இப்படியானவர்களால்தான் போலிச் சாமியார்கள் அதிகரித்துவிட்டனர். இப்படியான போலிச் சாமியார்களால், உண்மையான சாமியார்களின் நற்பெயர் கூடக் களங்கமாகிவிடுகிறது. நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும், துறவறம் மேற்கொள்வது அத்தனை சுலபமானது இல்லை.


நன்றி : ஸ்ரீ ராமகிருஷ்ணர் அருளிய கதைகள்


search tags : sree ramakrishna paramahamsae, Aanmikam, Saivam, Aanmika kathaigal, ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், சைவம், ஆன்மிகம், ஆன்மிகக் கதைகள்.

Related Posts Widget for Blogs by LinkWithin