ஸ்தோத்திரங்கள், mp3 பாடல்கள், காணொளிகள் போன்றவற்றை இலகுவாகக் கண்டுகொள்ள, உருவாக்கப்பட்ட தொகுப்பினைக் கீழே காணலாம்.

"இலகுவான தொகுப்புக்கள்" என்பதை சொடுக்குவதன்(Click) மூலம் அனைத்துத் தொகுப்புக்களையும் நீங்கள் காணலாம்:

|| * இலகுவான தொகுப்புக்கள் * ||


BEST VIEW : <1280x720 (over 1280x720 Resolution)
-*-*-*-*-*-

Friday, May 8, 2009

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் பொன்மொழிகள்நீங்கள் எல்லோரும் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரைப் பற்றி அறிந்திருப்பீர்கள். அவர் கூறிய பொன்மொழிகளில் இருந்து சில உங்களுக்காக.

சத்தியம் என்பது பற்றி பரமஹம்சர் கூறுவதாவது:

* சத்தியத்தின் மூலமாகவன்றிக் கடவுளை அடையமுடியாது.

* உள்ளத்தை முதலில் தூயதாக்கு. பிறகு அதனுள் தெய்வத்தைப் பிரதிஷ்டை பண்ணு. வெறும் சங்கு நாதத்தைக் கிளப்புவதால் ஆவதொன்றுமில்லை.

* உலக வேலைகளைச் செய்துகொண்டிருப்பதற்கிடையிலும் ஒருவன் சத்திய விரதத்தைத் தீவிரமாக அனுஷ்டிக்கவேண்டும். இக்கலியுகத்தில் சத்திய விரதத்துக்கு நிகரான ஆத்மசாதனம் இல்லை. சத்திய விரதம் என்பது சத்தியத்தையே எப்போதும் பேசுதலைக் குறிக்கின்றது. இக்கலியுகத்தில் சத்தியம் பேசுதலே சிறந்ததொரு தவம் ஆகிறது. ஒருவன் சத்தியத்தைக் கொண்டே கடவுளை அடையலாம்.

* எந்தக் காரணத்தை முன்னிட்டும் மனிதன் பொய் பேசலாகாது. பொய் பேசிப் பழகுபவன் படிப்படியாக பாவ காரியங்களைச் செய்யக்கூடிய கீழான மனப்பான்மையைப் பெறுகின்றான்.

* அசுத்தமான மனப்பான்மை உள்ளவர்களுக்கும் ஈசனுடைய அருளுக்கும் வெகுதூரம். எளிமையும் சத்தியமும் உடையவன் ஈசனுடைய அருளை எளிதில் பெறுவான்.

* இறைவனை அடைய முயற்சி செய்யும் ஒருவன் சத்தியத்திலிருந்து சிறிதேனும் பிறழாதிருந்து பழகவேண்டும். சத்தியத்தில் நிலைத்திருப்பவனுக்கு ஈசுவரானுபூதி வாய்க்கிறது.

* முளைத்து வெளியே வந்த யானையின் தந்தம் மறுபடியும் உள்ளே போவதில்லை. ஒருமுறை வெளியே வந்தால் வந்ததுதான். அது போல ஒருவன் தான் கொடுத்த வாக்கை நிறைவேற்றி வைக்கவேண்டும். கொடுத்த வாக்கிலிருந்து அவன் விலகிச் செல்லலாகாது.search tags : sree ramakrishna paramahamsar, ramakrishna paramahamsar, sathyam, சத்தியம், ராமகிருஷ்ணர், ராம கிருஷ்ண பரமஹம்சர்.

5 comments:

Anonymous said...

i like ramakrisna paramahamsar's articles.

thank you for posting.

Suresh

விஷ்ணு. said...

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் பொன்மொழிகளில் ஒரு சிலவற்றை கடைபிடித்தாலே வாழ்வின் உச்சத்தை அடையலாம்

அடியார் said...

" i like ramakrisna paramahamsar's articles.

thank you for posting.

Suresh "

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுரேஷ்.

" ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் பொன்மொழிகளில் ஒரு சிலவற்றை கடைபிடித்தாலே வாழ்வின் உச்சத்தை அடையலாம் - விஷ்ணு "

தங்கள் கருத்து முற்றிலும் உண்மையானதே... தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

covaipraveen said...

Thanks for Ramakrishnar ponmozhigal

Can you post Vivekanandar ponmolzhigal also.

Thanxxx in advance

Shiva shiva

அடியார் said...

Thanks for your comment covaipraveen....

I will post Vivekanandar's ponmoligal in few days...

Post a Comment

Related Posts Widget for Blogs by LinkWithin