ஐம்பெரும் வேள்விகளைப் பற்றி அறிந்து கொள்வோம் வாருங்கள். வேள்வி என்பது யக்ஞம் அல்லது யாகம் எனப் பொருள்படும். ஒரு மனிதன் தன் வாழ்நாளில் அவசியம் இவற்றைச் செய்ய வேண்டும்.
1. தேவ யக்ஞம் :
கடவுள் வழிபாடு என்பது தினந்தோறும் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று. இஷ்ட தேவதையை முறைப்படி நாள்தோறும் வாழ்த்தி வணங்க வேண்டும். தினமும் நாம் இறைவனை வழிபடும் போது தேவ யக்ஞம் செய்தவர்களாகின்றோம்.
2. பித்ரு யக்ஞம் :
எந்த ஒரு மனிதனும் தன் முன்னோர்குக் கடன்பட்டவன் ஆகின்றான். அப்படிப்பட்ட முன்னோர்க்கு நன்றியுள்ளவனாக இருக்கவேண்டும். தினமும் இறைவனைத் தொழும் போது " என் முன்னோர்கள் எவ்வுலகில் எந்தநிலையில் இருந்தாலும் இன்புற்று இருக்கவேண்டும் " என்று நம் முன்னோர்க்காக வணங்கவேண்டும்.
அத்தோடு நம்மோடு இருக்கும் நம் தாய் தந்தையர்க்கு நாள்தோறும் பணிவிடை செய்வதும் பித்ரு யக்ஞமாகக் கொள்ளப்படும்.
3. ரிஷி யக்ஞம் :
உலக நன்மையின் பொருட்டு ரிஷிகளும் சான்றோர்களும் சிறந்த சாஸ்திரங்களை உருவாக்கியுள்ளனர். அவர்கள் எழுதிச் சென்ற தெய்வ நெறி நூல்களை முறையாக ஆராய்வதும், அவற்றை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வதும் ரிஷி யக்ஞம் அல்லது பிரம்ம யக்ஞம் ஆகும்.
4. பூத யக்ஞம் :
பசு, ஆடு போன்ற உயிரினங்கள் மக்கள் வாழ்க்கைக்குப் பல வகைகளில் பயன்பட்டு வருகின்றன. இப்படிப்பட்ட இவற்றை நாம் நன்கு பேணிக் காத்துவருதல் வேண்டும். இப்படி காத்துவருதல் பூத யக்ஞம் ஆகும்.
5. நர யக்ஞம் :
மக்களது பசியைப் போக்கி, சிறந்த கல்வியை அளித்து, அவர்களின் நோயை நீக்கி அவர்களுக்கு செய்யும் நல்லுதவிகள் எல்லாம் நர யக்ஞத்தில் அடங்குகின்றன,
இங்கனம் உள்ள, பஞ்ச மகா யக்ஞத்தில் மனிதன் உறுதியாக ஈடுபட வேண்டும். உணவிலிருந்து உயிர்கள் உண்டாகின்றன. அவ்வுணவு மழையில் இருந்து உருப்பெறுகின்றது. அம்மழை யக்ஞத்தில் இருந்து வருகிறது. எனவே மழை வரவேண்டும் என நாம் விரும்பினால், இந்த ஐந்து வகையான வேள்விகளையும் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும் என வேதங்கள் கூறுகின்றன.
search tags : velvi, yagam, yaham, வேள்வி, யாகம்
மஹா கும்பமேளா 2025 - முன்பதிவு
22 hours ago
4 comments:
// நாள்தோறும் வாழ்த்தி வணங்க வேண்டும் //
நெடுநாளாக என் மனதில் உள்ள கேள்வி
"இறைவனை ஏன் வாழ்த்தி வணங்க வேண்டும்?"
வாழ்த்துதல் என்பதை செய்வதனால் இறைவன் புகழுக்கு மயங்குபவன் என எடுத்துக்கொள்ளலாம?
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அன்பரே,
பொதுவாக நாம் பெரியோரிடம் பேசும் போது எப்படிப் பேசுகின்றோம்?. மரியாதையான சொற்களால் அல்லவா. காரணம் அவர்கள் நம்மிலும் மூத்தோர், நம் வழிகாட்டிகள் என்பதால். மரியாதையான சொற்கள் கூட ஒரு வகை வாழ்த்துதான். நமக்கு நன்மை செய்தோரை நாம் புகழாமல் இருப்போமா... இல்லையே
இப்படியிருக்க, நம்மைப் படைத்த இறைவன் எத்தனை பெரியவன், ஆதி அந்தமில்லாதவன், நமக்கு வேண்டியதை சரியான நேரத்தில் தருபவன், இப்படிப் பட்ட இறைவனை எப்படி வாழ்த்தாமல் இருக்கமுடியும்.
நிற்க, இறைவன் நம் புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் அப்பாற்பட்டவன். இறைவனின் எண்குணங்களுள் ஒன்று புகழ்ச்சியையும் இகழ்ச்சியையும் சமமாகக் கொள்ளல் என்பது. ஆதலால் நம் வாழ்த்துதலால் இறைவன் மயங்கமாட்டார்.
எனவே இறைவனை வணங்கும் போது இகழ்ந்தால் கூட இறைவன் உங்களைத் தண்டிக்கப் போவதில்லை. ஆனால் நம்மைக் காத்து, நாம் கேட்பவற்றை அருளி, நம்மை வாழவைக்கின்றானே அந்த இறைவனுக்கு நாம் செய்யும் மரியாதை, நன்றிக்கடன், விசுவாசம்தான் என்ன?. அதுதான் இறைவனை வாழ்த்துதல் என்பது.
நன்றி அடியார் அவர்களே. ஆன்மீக தேடலுக்கு தங்கள் பதிவுகள் நல்ல ஒரு தீனீ. நிறைய எழுத வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள்.
தங்கள் கருத்துக்கு நன்றி விஷ்ணு....
Post a Comment