ஸ்தோத்திரங்கள், mp3 பாடல்கள், காணொளிகள் போன்றவற்றை இலகுவாகக் கண்டுகொள்ள, உருவாக்கப்பட்ட தொகுப்பினைக் கீழே காணலாம்.

"இலகுவான தொகுப்புக்கள்" என்பதை சொடுக்குவதன்(Click) மூலம் அனைத்துத் தொகுப்புக்களையும் நீங்கள் காணலாம்:

|| * இலகுவான தொகுப்புக்கள் * ||


BEST VIEW : <1280x720 (over 1280x720 Resolution)
-*-*-*-*-*-

Tuesday, June 9, 2009

இராமாயணம்-3இராமயணம்

பகுதி - 3

(முன்னைய பாகம் : செல்க)


வசிட்ட முனிவர், தசரதரே! உனக்கு எதிர்காலம் சிறப்பாக இருக்கும். சிறந்த மகப்பேறு கிடைக்கும். அங்க நாட்டில் மனுகுலத்தில் உத்தானபாதனுடைய புதல்வன் ரோமபாதன் என்னும் மன்னன் அரசு புரிகிறான். அந்த நாட்டில் பன்னிரண்டு ஆண்டுகளாக மழையில்லாமல் பஞ்சம் நேர்ந்தது. கலைக்கோட்டு முனிவரை அங்கு அழைத்து வந்தபடியால் மழை பொழிந்து வளம் பெருகியது. உன்னுடைய புதல்வியாகிய சாந்தையை உரோமபாத மன்னனுக்கு ஸ்வீகாரமாகக் கொடுத்தனையல்லவா? அப்பொழுது அந்தச் சாந்தையைக் கலைக்கோட்டு முனிவர் திருமணம் செய்து கொண்டார். அதனால், அவர் உனக்கு மருமகராவார். அவர் அளவற்ற தவம் செய்தவர். சமானமில்லாதவர். அவரை அழைத்துக் கொண்டு வந்து புத்திர காமேஷ்டி யாகம் செய்வாயானால் உனக்குப் புத்திர பாக்கியம் உண்டாகும் என்று கூறினார்.

தசரதச் சக்கரவர்த்தி பரிஜனங்கள் புடை சூழ, தேரேறி அங்க நாட்டை அடைந்தார். உரோம பாதர் அன்புடன் வரவேற்று உபசரித்தான். கலைக்கோட்டு முனிவரை அயோத்திக்கு அனுப்புமாறு வேண்டிக் கொண்டான். தசரதருடைய வேண்டு கோளுக்கிணங்கி கலைக்கோட்டு முனிவர் என்கின்ற ரிஷ்யசிருங்கர் தன் மனைவியாகிய சாந்தையுடன் அயோத்தி மாநகருக்கு எழுந்தருளினார். தசரதர் ஓராண்டு அவருக்கு வந்தனை வழிபாடு செய்தார்.

அவர் ஒருநாள் ரிஷ்யசிருங்கரை வணங்கி தவ முனிவரே! அடியேன் அறுபதினாயிரம் ஆண்டு இவ்வுலகை ஆண்டேன். பிறிதொன்றை வேண்டேன். எனக்குப் பின் நல்ல தலைவன் இல்லையே என்று மக்கள் வருந்துவார்களே என்று நான் வருந்துகின்றேன். அதலால், இந்த உலகத்தை அறநெறியில் நிறுத்தி ஆட்சி புரியும் மாட்சியுடைய ஒரு புத்திரன் உண்டாக அருள்புரிய வேண்டும் என்று வேண்டிக்கொண்டார்.

தார்காத்த நறுங்குஞ்சித் தனயர்களென் றவமின்மை
வார்காத்த வனமுலையார் மணிவயிறு வாய்த்திலரால்
நீர்காத்த கடல்காத்த நிலங்காத்தே னென்னிற்பின்
பார்காத்தற் சூரியாரைப் பணிநீயென் றடிபணிந்தான்.

கலைக்கோட்டு முனிவர், புத்திராகாமேஷ்டி யாகம் செய்தால் உனக்குப் புத்திரபாக்கியம் கிடைக்கும் என்று கூறினார். பின்னர் கலைக்கோட்டு முனிவர், நகர்ப்புறத்தே பெரிய யாகசாலை அமைத்து யாகத்துக்குரிய திரவியங்களைக் குவித்து வசிட்ட முனிவர் முதலிய தவசீலர்கள் துணைபுரிய வேதமந்திரங்களைக் கூறி மிகச் சிறந்த வேள்வியைச் செய்தார்.

பூர்ணாகுதி கொடுத்தவுடன் ஒரு தெய்வபூதம் யாகத்தில் தோன்றி யாக பாயசத்தை வழங்கி மறைந்தது. கலைக்கோட்டு முனிவரின் கட்டளைப்படி யாகபாயசத்தை ஒரு பாதி கௌசலைக்கும், மற்றொரு பாதி கைகேயிக்கும் மன்னர் வழங்கினார். கொடுத்து பழகிய கௌசலையும் கைகேயியும் தங்களுக்கு மன்னர் வழங்கிய பாயசத்தில் பாதி, பாதி சுமித்திரைக்கு வழங்கினார்கள். மன்னவரால் கொடுபடாமல் விடுபட்ட சுமித்திரைக்கு இரண்டு பங்கு கிடைத்தது. மூன்று தாய்மார்களும் கரு உற்றார்கள். பன்னிரண்டு மாதங்கள் கரு இருந்தார்கள்.

நாம் எல்லாருமே பன்னிரண்டு மாதம் கருவில் இருக்கின்றோம். அது எவ்வாறெனில் ஆன்மாக்கள் வானத்திலிருந்து மழை வழியாக மண்ணுலகத்தை அடைகின்றன. அவ்வாறு வந்த உயிர்கள் காய், கனி, தானியங்களில் கலந்து தந்தையார் வயிற்றில் 2 மாதங்கள் கரு இருந்த பின்னர், தாய் வயிற்றில் பத்துமாதம் கரு இருந்து மகவாகப் பிறக்கின்றன. ஆகவே உயிர்கள் கருவில் பன்னிரண்டு மாதங்கள் இருக்கின்றன. முதலில் நம்மை கருச்சுமந்தவர் தந்தையார். ஆதனால்தான் நம்முடைய பெயருக்கு முன்னால் தந்தையார் எழுத்தைப் பொறிக்கின்றோம்.

இராமருடைய கரு மன்னவனிடம் இருந்தில்லாமல் பாயாச வழியாகத் தாய்வயிற்றை அடைந்ததால் இவர்கள் 12 மாதம் கருச்சுமந்தார்கள்.


தொடரும் ...


இப்பதிவோடு தொடர்புடைய பதிவு : இராமாயணம் - 2


search tags : Ramayanam, Ramar, இராமாயணம், இராமர்

_*_*_*_

No comments:

Post a Comment

Related Posts Widget for Blogs by LinkWithin