ஸ்தோத்திரங்கள், mp3 பாடல்கள், காணொளிகள் போன்றவற்றை இலகுவாகக் கண்டுகொள்ள, உருவாக்கப்பட்ட தொகுப்பினைக் கீழே காணலாம்.

"இலகுவான தொகுப்புக்கள்" என்பதை சொடுக்குவதன்(Click) மூலம் அனைத்துத் தொகுப்புக்களையும் நீங்கள் காணலாம்:

|| * இலகுவான தொகுப்புக்கள் * ||


BEST VIEW : <1280x720 (over 1280x720 Resolution)
-*-*-*-*-*-

Friday, June 19, 2009

இராமாயணம்-5இராமாயணம்

பகுதி - 5

(முன்னைய பாகம் : செல்க)


விசுவாமித்திர முனிவருடன் கானகம் செல்லல்:-

விசுவாமித்திரர் கூறினார், ஆதித்தன் குலந்தழைக்க வந்த அரசரேறே! நான் சந்நியாசி. எனக்கு என்ன வேண்டும்? எனக்கு எதிலும் விருப்பு வெறுப்பு இல்லை. யாகம் மூன்று வகைப்படும்.

1. பகைவரை அழிக்கச் செய்வது. அது அபிசார ஓமம் எனப்படும்.

2. தான் உய்யப் பயன் கருதிச் செய்வது. அது புத்ர காமேஷ்டி - அசுவமேதம் முதலியன.

3. உலகம் உய்யப் பொது நலங்கருதிச் செய்வது. அது உத்தம யாகம் எனப்படும். வேந்தர் பெருமானே! உலக நலன்கருதி நான் தருக்கள் நிறைந்த குளிர்ந்த கானகத்தில் யாகம் செய்வேன். அதனை அரக்கர்கள் தடுத்து இடையூறு செய்கின்றார்கள். ஆதலால், அந்த வேள்வியைக் காவல் புரிய ஒருவனையனுப்ப வேண்டும் என்று கூறினார்.

நல்லது, சுமந்திரரே! ஒரு போர் வீரனை அனுப்பு..

மன்னவனே! சாமான்யமான போர் வீரனால் ஆகாது...

சுவாமீ! சேனைத் தலைவனை அனுப்புகின்றேன்...

அன்பனே! சேனாதிபதியால் ஆகாது...

ஐயனே! அடியேன் வருகின்றேன்...

வேந்தனே! உன்னாலும் ஆகாது, உன்னைப் பார்க்கினும் சிறந்தவன் ஒருவன் இருக்கின்றான், அவனை அனுப்புக...

குருநாதா! என்னைப் பார்க்கிலும் சிறந்தவன் அயோத்தியில் இருக்கின்றானா?, நான் பத்து ரதங்களை வென்றவன், ஓப்பாரும் மிக்காரும் இல்லாதவன், அடியேன் சம்பரனை அழித்தவன், தோள்வலியும் வாள்வலியும் மிக்கவன், சுமந்திரரே! என்னைப் பார்க்கிலும் சிறந்தவன் அயோத்தியில் இருக்கின்றானா?...

கொற்றவரே! உம்மைவிடச் சிறந்தவர் சுவர்க்க மத்திய பாதலம் ஆகிய மூவுலகங்களிலும் இல்லை...

குருநாதா! சுமந்திரர், அதிநுட்பமான மதிநுட்பம் உடையவர் அவர் கூறியதைக் கேட்டீரா? என்னைவிடச் சிறந்தவன் இல்லை, இல்லாததை இருப்பதாக எண்ணி கூறுகின்றீர், ஓருவன் ஆமை மயிர்க்கம்பளம் கேட்டானாம், இன்னொருவன் குதிரைக் கொம்பு பொடிடப்பி கேட்டானாம், அதுபோல எனக்கு நிகர் ஒருவரும் இல்லை, உண்டு என்று தாங்கள் கூறுகின்றீர்கள்...

தசரதா! உன்னைப் பார்க்கிலும் ஒரு கோடி மடங்கு உயர்ந்தவன் அயோத்தியில் இருக்கிறான், அவனை அனுப்பு, இல்லாத ஒன்றை இருப்பதாக நான் ஒருபோதும் கூறமாட்டேன். என் வாக்கு சத்தியம்...

விசுவாமித்திருடைய வசனங்களைக் கேட்டுத் தசரதர் சிறிது சிந்தித்தார்.

குருநாதா! என்னைப் பார்க்கிலும் பலமடங்கு உயர்ந்தவர் வசிட்ட முனிவர். அவரை அழைத்துப் போங்கள்...

விசுவாமித்திரர் புன்னகை பூத்தார். அவர் ஒரு தாடி நான் ஒரு தாடி. இரு தாடிகளும் சென்று தாடகையிடம் வாதாடி நிற்க வேண்டும். நான் கூறுவது வசிஷ்டரை யன்று. அவன் வேத வேத்யன். அவன்தான் இராமன், மன்னவனே, நீ பெற்ற நான்கு மைந்தர்களில் கரிய செம்மல் அரிய ஆற்றல் படைத்தவன். இராமனை அனுப்புக என்றார்...

இராமனையனுப்பு என்ற சொல் புண்ணிலே வேல் பாய்ந்தது போல் மன்னவனை வாட்டி வதைத்தது. அளவில்லாத அல்லல் அடைந்தார். விசுவாமித்திரருடைய திருவடியில் வீழ்ந்தார். கவலைக் கடலில் ஆழ்ந்தார்.

குருநாதா! இராமன் இளம் பாலகன். போர் முகம் அறியாதவன். மாயத்தில் வல்ல அரக்கர்களை வெல்லும் திறம் அறியாதவன். அடியேன் பல போர்களில் வெற்றி பெற்றவன். நான் வருகின்றேன். அரக்கர்களைக் கொன்று வேள்வியை முடித்துக் கொடுப்பேன் என்றார்...

தசரதர் இராமனைத் தன்னுடன் அனுப்ப மயங்கிய தன்மையினால் விசுவாமித்திர் முனிவர் வெகுண்டு எழுந்தார். அவருடைய கோபக்கனல் உலகங்களை வெதுப்பியது. சூரியன் மேலண்டத்துக்குப் போய் மறைந்தான். நிலம் நடுங்கியது, திசை யானைகள் அஞ்சி ஒடுங்கின, சராசரங்களெல்லாம் அசைந்தன.

வசிட்ட முனிவர் விசுவாமித்திர முனிவரின் சீற்றத்துக்கு அஞ்சித் தசரதரைப் பார்த்து மன்னவரே! இராமனை விசுவாமித்திரருடன் அனுப்பி வையுங்கள். அதனால் இராமனுக்கு ஆதித்த குலத்துக்கும் நன்மை உண்டாகும். என் வார்த்தையைத் தட்ட வேண்டாம் என்று கூறினார்...

தசரதர் சுமந்திரரைப் பார்த்து, இராமனையும், இலட்சுமணனையும் அழைத்து வருமாறு கட்டளையிட்டார். சுமந்தரர் கௌசலையின் அரண்மனைக்குச் சென்று. இந்தத் தகவல்களைக் கௌசலையிடம் கூறி இராமனை அழைத்துக்கொண்டு வந்தார்.

இராமர் வசிட்டரையும், விசுவாமித்திரரையும், தந்தையாரையும் திருவடியில் வீழந்ந்து வணங்கினார். தசரதர் இராம இலட்சமணரின் கரங்களைப் பற்றி விசுவாமித்திரருடைய கரத்தில் வைத்து, சுவாமி! இவர்களுக்குத் தாய், தந்தை, குரு எல்லாம் தேவரீர்தாம். இவர்களைப் பெறுவதற்கு நான் அறுபதினாயிரம் ஆண்டுகள் தவம் செய்தேன். என் உயிரைத் தங்களிடம் ஒப்படைத்திருக்கிறேன். திரும்பவும் கொண்டு வந்து சேர்க்கவும் என்று தழுதழுத்த குரலில் சொன்னார்.

விசுவாமித்திர முனிவர் விடைபெற்றுப் புறப்பட்டார். வாகனங்களில் சென்றால் எறும்பு, புழு முதலிய சிற்றுயிர்கள் மாண்டொழியும். அதனால், முனிவர்கள் தேர் முதலிய ஊர்திகளில் செல்லாமல் நடந்தே பிரயாணம் செய்வார்கள். அதனால், விசுவாமித்திரரி நடந்த போவதனால், இராம, இலட்சுமணர் தொடர்ந்து போவதாயிற்று. வழியில் மிகப் புனிதமான சரயு நதியைக் கண்டார்கள். அதில் நீராடி மகிழ்ந்து ஒரு மலர்ச் சோலையை அடைந்தார்கள். அங்குக் காயத்ரி மந்திரத்தை ஜெபித்துச் சூரியனுக்கு அர்க்கியம் கொடுத்தார்கள்.

காணாமல் கொடு, கோணாமல் கொடு, கண்டு கொடு என்பது பழமொழி. சூரியன் உதிப்பதற்கு முன்னமேயே சூரியனுக்கு அர்க்கியம் கொடுப்பது, காணாமல் கொடுப்பதாகும். சூரிய பகவான் உச்சியிலிருக்கம் பொழுது அர்க்கியம் கொடுப்பது கோணாமல் பொடுப்பதாகும். சூரிய பகவான் மேற்கடலில் மூழ்கும்பொழுது சூரியனைப் பார்த்துக்கொண்டே அர்க்கியம் கொடுப்பது கண்டு கொடுப்பதாகும். இரவில் படுக்க வேண்டுமே, எவ்வாறு படுப்பார்கள்?


தொடரும்...


இப்பதிவோடு தொடர்புடைய பதிவு : இராமாயணம் - 4


search tags : Ramayanam, Ramar, இராமாயணம், இராமர்

_*_*_*_

6 comments:

Anonymous said...

aha arputham

Anonymous said...

Nice....

Please intha natpaniyai thodaravum....

Arun,

அடியார் said...

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி அனானி அன்பர்களே...

Anonymous said...

Veham4U-saivam.

peree uthaikkirathee?

ingke raamaayanam engke vanthathu?

athu vainavam allavaa?

அடியார் said...

தவறினைச் சுட்டிக் காட்டியிருக்கும் அனானி அன்பருக்கு நன்றி...

இத் தளம் அனைத்து நற்கருத்துக்களுக்கும் இடம்தரும் ஒன்று...

இதில் சைவம் என்பதாக எழுதுவது அத்தனை நன்றாக இருக்காது.. என்பதை ஏற்றுக் கொள்கிறேன்...

அதனால் மாற்றுகின்றேன்..

seidhivalaiyam.in said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

Post a Comment

Related Posts Widget for Blogs by LinkWithin